ஒரு செய்கைக்கான பிரதிச் செயல் THE REACTION TO AN ACTION 59-08-10 1. நான் அதற்குத் தகுதியானவன் அல்ல, ஆனால் இன்றிரவு இந்த மாபெரும் பழைய பக்கி (Buckeye) மாநிலத்திற்கு மீண்டுமாக இங்கு இருப்பதற்கும், மற்றொரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததற்காகவும் நான் நிச்சயமாக நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த முறை மிடில்டவுனில் (Middletown) இருந்த ஞாபகங்கள் என் நினைவில் இன்னும் இருக்கின்றன. ஆனால் இன்றிரவு இங்கே வரும்போது, நான் ஒருபோதும் வழியைக் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்தேன். நான் சற்றே - சற்றே தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். தேவனின் வருகைக்காக நாம் தாழ்மையுடன் காத்துக் கொண்டு, இந்த வாரம் அவருடைய ஆசீர்வாதங்களின் ஒரு மகத்தான ஆவிக்குரிய பொழிந்தருளுதலை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது, நமக்கு இந்த திங்கள் முதல் சனிக்கிழமை வரை, ஆறு இரவுகள் உள்ளன. நானும் என்னுடன் இருப்பவர்களும், இந்த நேரத்தில் சிறிது ஓய்வாக இருந்தோம். சகோதரன் சல்லிவன் (Sullivan) என்னை மீண்டும் வருமாறு அழைப்பு விடுத்தார். எனவே நாங்கள் அவரை அழைத்து, இந்த அருமையான ஜனங்களில் சிலரை மீண்டும் சந்திக்க விரும்புகிறோம் என்று கூறினோம். மேலும் இந்த மாபெரும் சிலாக்கியத்தை தேவன் நமக்கு அளித்துள்ளார். பையன்கள் லியோவும் (Leo) ஜீனும் (Gene) எங்களுடன் வந்திருக்கிறார்கள். புஸ்தகங்கள், ஒலிநாடாக்கள் மற்றும் அது போன்றவை தேவையாயுள்ள வாடிக்கையாளர்களை கவனித்துக் கொள்வது அவர்களுடைய பணியாகையால், அவர்கள் புஸ்தகங்கள், ஒலிநாடாக்கள் இன்னும் பிறவற்றையும் வைத்திருப்பார்கள். 2. மேலும், சுகமளிக்கும் ஆராதனை அல்லது வியாதியஸ்தர்களுக்கான ஜெப ஆராதனை அவர்களுக்காக ஜெபிக்கலாமென்று நினைத்தோம். கர்த்தருக்குச் சித்தமானால் நாளை இரவு வியாதியஸ்தர்களுக்காக ஜெப ஆராதனையை தொடங்குவோம். ஜனங்கள் வரிசையில் கிரமமாக வரும்படியாக நாங்கள் வழக்கமாக ஜெப அட்டையை வழங்க வேண்டியுள்ளது. பின்னர் மீண்டுமாக நான் ஜனங்களும் அந்த மனநிலையில்தான் உள்ளனரா நான், என்று அறிய விரும்பினேன். நான் எப்பொழுதும் கூட்டத்திற்கு வந்து முதலில் பரிசுத்த ஆவியானவரால் நாம் என்ன சொல்ல அல்லது செய்ய வேண்டும் என்ற உணர்வைப் பெற்று அதன் பிறகு நாம் அறிவிப்புகளைச் செய்ய விரும்புகிறேன். இப்போது லியோவுடனும் மற்றவர்களுடனும் நான் பிரசங்கப் பீடத்திற்கு வந்தபோது. நான் சற்றே நோக்கிப் பார்த்தபோது, இங்கேயிருக்கும் இச்சிறுவனையும் சக்கர இவர்களையும் கண்டேன். நான் சுற்றிலும் நோக்கிப் நாற்காலியில் இருக்கின்ற பார்க்கையில், தேவன் நம்மை வியாதியஸ்தர் களுக்காக ஜெபிக்கும்படி செய்வார் என்ற உணர்வு எனக்கு வந்தது. 3. மேலும் அவர்கள்... நாளை மதியம்... (வழக்கமாக எப்பொழுது ஆரம்பிப்பீர்கள்? ஏழரை மணிக்கா?) சரி, ஆறு அல்லது ஆறரை மணிக்கு... எப்படியாயினும் பையன்கள் ஆறரை மணியளவில் நாளை இரவுக்கான ஜெபஅட்டையை வழங்குவார்கள். பின்பு நாம் வியாதியஸ் தர்களுக்காக ஜெபிக்கத் தொடங்கலாம். கர்த்தருக்கு சித்தமானால் நமக்கு ஆறு இரவுகள் அல்லது ஐந்து இரவுகள் உள்ளபடியால், ஒட்டுமொத்த ஜனக் கூட்டத்திற்கும், ஜெபித்துக்கொள்ள வேண்டுமென்று வந்திருப்பவர்களுக்காகவும் நாம் ஜெபிக்க இயலும். ஆகையால் நாம் அழைக்கப்படுகையில் நம்முடைய ஜெப அட்டைகளை எடுத்துக்கொண்டு வருவோமாக. இது வெறுமனே (கென்டக்கியில் நாம் அதை இவ்வாறு அழைக்கும் விதமாக) ஒரு காலங்கடத்தும் நெடுநேர கூட்டமாக (protractive meeting) மட்டும் இல்லாமல் ஒரு பண்டைய பாணியிலான எழுப்புதல் கூட்டமாக இருக்கும் என்று நம்புகிறோம். இங்கேயுள்ள முகாமிடும் தளத்தில் பல சிறு வீடுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டிருப்பதை அறிந்திருக்கிறேன். மேலும் ஜெப கூட்டங்கள் இங்கு நாள் முழுவதும், எல்லா இடங்களிலும் தொடர்ந்து நடப்பது நல்லது என்று நினைக்கிறேன். ஏனென்றால், நீங்கள் தேவனிடம் நெருங்கிச் சேராதவரை தேவனிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. உங்களுக்கு தெரியுமா "என்னிடத்தில் சேருங்கள், அப்பொழுது நான் உங்களிடத்தில் சேருவேன்" என வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது. இப்பொழுது நாம் தேவனிடத்தில் கிட்டிச் சேருவோம் என்ற ஒரே நோக்கத்தோடு இங்கிருப்போமானால், நம்முடைய முழு இருதயத்தோடும் அதைச் செய்வோம், தேவனிடம் கிட்டிச்சேருவோம். 4. நான் இதை கூற விரும்புகின்றேன்: உங்கள் அக்கிரமங்களை உங்கள் இருதயத்திலே மறைத்து வைத்திருக்கும் வரையில், தேவன் ஒருபோதும் உங்கள் ஜெபத்திற்கு செவிகொடுக்க மாட்டார். அவர் அதைச் செய்யமாட்டார். தேவன்.... வேதம் சொல்கிறது 1 யோவான் 3 என்று நம்புகின்றேன், "நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து" என்கிறது. அதாவது நம்முடைய இருதயத்தில் குற்றவுணர்வு இல்லாதிருந்தால். ஒரு சில நாட்களுக்கு முன்பு அத்தகைய ஒரு அனுபவம் எனக்கு உண்டானது. நான் அதை பற்றி உங்களிடம் சொல்லும்படி இங்கே கொஞ்சம் நிறுத்துகிறேன், ஏனென்றால் நாம் ஒருபோதும் எவ்வகையிலும் அவசரமாக முடிக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. இப்பொழுது, இன்று நமது அமெரிக்க பாரம்பரியத்தின் மாபெரும் வீழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது அதுதான், எதுவெனில் நாம் எல்லோருக்கும் மேலாக விரைந்தோட முயற்சிக்கிறோம். நாம் காத்திருக்காமல், தேவனுக்கு மேலாகவே விரைந்தோடுவது போல் காணப்படுகின்றோம். "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைவார்கள்." 5. நான் வீட்டில் சில சோதனைகளினூடாக சென்றேன், மேலும் சில விஷயங்களுக்காக சாட்சி கூறும்படி விசாரணைக்காக அழைக்கப்பட்டேன். நான் மிகவுமாய் களைப்படையும் வரையிலும் அவர்கள் மீண்டும் மீண்டும் கேள்வியை கேட்டுக் கொண்டேயிருந்தனர்; நான் ... முழு உலகத்தையும் கட்டி என் தலைமேல் வைத்து அமிழ்த்துவது போன்று காணப்பட்டது. நான் அந்நாள் காலையில் வீட்டுக்கு வந்த போது, என் மனைவி "சரி, நீர் எப்படி இருக்கிறீர்?" என்று கேட்டாள். அதற்கு நான், "தேனே, அந்த காரியங்கள் ஒருவரை பைத்தியம் பிடிக்கச் செய்துவிடும்" என்றேன். பின்பு நான் காலை உணவு உண்ண உட்கார்ந்த போது தொலைபேசியில் அழைப்பு வந்தது. எங்களுக்கு ஒரு பதிலளிக்கும் ஊழியம் இருந்தது மற்றும் இது போதகர் வீடொன்றின் தனிப்பட்ட எண்ணாகும். எனவே ஒலித்த உடனேயே, அவள் சென்று தொலைபேசி அந்த அழைப்பை எடுத்தாள். அவள் கையை தொலைபேசியில் வைத்துக்கொண்டு, "பில்லி, மீண்டும் வழக்கறிஞர்கள் தான்" என்றாள். அதற்கு நான், "ஒ." "தேனே, என்னால் இன்னுமொரு மதிய வேளையை அதனிமித்தம் தாங்கிக் கொள்ள முடியாது (ஏற்கனவே சுமார் ஆறு அல்லது ஏழு நாட்கள் அவ்வாறுதான் கடந்து சென்றன)" என்றேன். நான், "என்னால் அதை சகித்துக்கொள்ள முடியாது" என்றேன். பின்பு நான் மேசையை விட்டெழுந்து வெளியே சென்று விட்டு, "அவர்களிடம் நான் இப்போது இங்கே இல்லை என்று சொல்லு" என்று சொல்லி வீட்டின் பின்புறம் சென்றுவிட்டேன். நான் மிகவும் மோசமாக உணர்ந்து, வீட்டிற்கு திரும்பி வந்தேன். ஒரு மனுஷனாக நான் இருப்பதை விட என்னுடைய மனைவி மிகச்சிறந்த ஒரு பெண்மணியாக இருக்கிறாள். அதனால் அவள் வாசலண்டை வந்து, என்னைப் பார்த்தவாறு, "பில்லி, அது மெய்யாகவே சரியான காரியம்தானா?" என்று கேட்டாள். நான் "நிச்சயமாக" என்றேன். அது சரியல்லவென்று எனக்கு தெரியும், இருப்பினும் என் கூற்று நம்பகமானது என்று அவளை எண்ண வைக்க விரும்பினேன். ஆகையால் நான் "ஆம், சரியாக அப்பொழுது நான் இங்கேயில்லையே" என்றேன். அவள் "ஆனால் அவர்கள் அழைக்கும் போது நீர் இங்குதானே இருந்தீர்" என்றாள். அதற்கு நான் "ஓ, அதெல்லாம் சரிதான்" என்றேன். 6. பின்னர் நான் வெளியே சென்று விட்டேன். அங்கே ஒருவர், ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்ட ஒரு குழந்தையுடன் காத்துக் கொண்டிருந்தார். அந்த குழந்தைக்காக ஜெபிக்கும்படியாக நீண்ட தூரத்திலிருந்து வந்திருந்தார், என்னே... நான் நான் நான் மிக பரிதாபகரமாக உணர்ந்தேன். பின்னர் நான் அக்குழந்தைக்காக ஜெபிக்க சென்ற போது, ஏதோ ஒன்று என்னிடம் "ஏன், நீ ஒரு பொய்யன். நீ சென்று இந்த குழந்தையின் மீது கை வைக்க போகிறேன் என்கிறாயா? இந்த சுகவீனமான குழந்தைக்காக ஜெபிக்கும்படி இந்த மனிதன் கிட்டத்தட்ட நானூறு மைல் தொலைவிலிருந்து வந்துள்ளார், நீயோவெனில் ஒரு பொய்யை சொல்லி, உன் மனைவியைக் கொண்டும் அதைச் சொல்ல வைத்தாய்" என்று கூறினது. அப்போது நம்முடைய இருதயம் நம்மை குற்றவாளியென்று தீர்க்கிறது. உங்களுக்கு புரிகிறதா? அது தவறாயிருந்தது. எனவே நான் அந்த மனிதனிடம் கூறினேன், "திருவாளரே, நீர் சற்றே இங்கேயிருப்பீரானால் உம்முடைய குழந்தைக்காக நான் ஜெபிப்பேன். ஆனால் உம் குழந்தைக்காக ஜெபிப்பதற்கு நான் பாத்திரனல்ல," "ஏனெனில் உம்முடைய குழந்தைக்காக ஜெபிப்பதற்கு முன்பாக நான் சிலவற்றைச் சரி செய்துக் கொள்ள வேண்டியவனாயிருக்கிறேன்" என்றேன். நான் "தவறான ஒரு காரியத்தை செய்துள்ளதால் என் இருதயம் என்னை குற்றப்படுத்துகின்றது. நான் சென்று முதலில் அதை சரி செய்துக் கொள்ள வேண்டும்" என்றேன். 7. நான் வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு சென்று, அவரது கதவைத் தட்டினேன், அவர் கதவருகே வந்து, "நீர் போய்விட்டீர் என்று நினைத்தேன்" என்றார். "நீர் அழைத்த போது நான் வீட்டின் பின்புறம் தான் சென்றிருந்தேன்" என்று நான் கூறினேன். மேலும் நான் "ஐயா, நான் என்ன செய்தேன் என்று சொல்லுகிறேன்" என்று கூறி அவரிடம் அதை விளக்கினேன். "நீங்கள் எல்லாரும் என்னை அத்தகைய சிக்கலான நிலைக்கு தள்ளினீர்கள்" என்றேன், "எனக்கு - எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 'அவர்கள் அதைச் எனக்கு செய்தனரா?' அல்லது 'நீர் இதை பார்த்தீரா?' என்று இந்த விதமான கேள்விகளைக் கேட்டீர்கள்" "எனக்கு - எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் திரும்ப திரும்ப திரும்ப உங்களிடம் கூறிவிட்டேன்" என்றேன். ஆனால் நான் சொன்னேன்...ஒரு நோய்வாய்ப்பட்ட குழந்தைக்காக நான் ஜெபிக்க சென்றபோது என்ன நடந்தது என்று அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் சொன்னார்... நடந்து தன் இருக்கையை விட்டெழுந்து அவரது மேசையின் பின்னால் நடந்து வந்து அவரது கையை என் தோளின் மேல் இட்டவாறு, என் கண்ணை உற்றுப்பார்த்தவாறு, என்னுடைய மறுகையையும் பற்றிக்கொண்டு, அவர் கூறினார் "சகோதரன் பிரன்ஹாம், உம் மீது எனக்கு எப்பொழுதுமே நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்போதோ அது முன்பு இருந்ததைக் காட்டிலும் இன்னும் அதிகமாகி விட்டது" என்றார். 8. அது எனக்கு ஓர் நல்லுணர்வை ஏற்படுத்தியது. பிறகு என் காரில் ஏறி, நான் வழக்கமாக ஜெபிக்கப் போகும் என்னுடைய சிறிய குகைக்குச் சென்றேன். மேலும் நான் "இப்போது, நீ தவறு செய்திருப்பாயானால், சென்று முதலாவது உன் தவறை அறிக்கை செய், அதன் பின் தேவனிடம் திரும்பி வருவாயாக" என்று நினைத்தேன். அதனால் நான் என்னுடைய சிறு குகைக்குச் சென்று, மதியம் முழுவதும் ஜெபித்தேன். அதைச் செய்ததற்காக என்னை மன்னியும், நான் இனிமேல் அவருடைய ஜனங்களுக்கு ஜெபிக்க நான் பாத்திரனல்ல என்று கர்த்தரிடம் கூறினேன். நான் பொய் நான் சொல்லியிருக்கிறேன் என்பதை நான் அறிந்திருக்கும் வரையிலும் என்னால் விசுவாசத்தை உடையவனாக இருக்க முடியாது. மேலும் நான் "என்னை மன்னியும், கர்த்தாவே, நான் - நான் எனக்கு கிருபை அளித்தருளும், இனி ஒருபோதும் நான் - நான் அதைச் செய்யமாட்டேன்" என்று சொன்னேன். சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வரை நான் ஜெபித்து கொண்டிருந்தேன். அது காட்டில் மிகவும் உள்ளே இருந்தது. அங்கிருந்து ஒரு சிற்றோடையானது மூன்று அல்லது நான்கு தெருக்கள் தூரத்திற்கு ஓடி ஒரு பள்ளத்தாக்கில் விழுகின்றது. நான் வெளியே சென்றேன்; இப்பொழுது மரங்கள் மிகவும் பசுமையாக இருந்தது. நான் குகையை விட்டு வெளியே வந்த பிறகு ஒரு பெரிய பாறையின் மீது நின்று கொண்டிருந்தேன்... எப்பொழுதுமே...அது கிழக்கு நோக்கியிருந்தது. நான் எப்பொழுதுமே ஓரிரு நாள், அல்லது ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் ஜெபித்தபின், வெளியே சென்று இந்தப் பாறையின் மீது நின்று, என் கரங்களை உயர்த்தி, கர்த்தரைத் துதிப்பதுண்டு; ஒரு நாளிலே, நான் கல்லறையில் இருந்தாலும், அவர் வரும்போது, நான் எழுந்து அவர் கிழக்கிலிருந்து வருவதைக் காண்பேன் என்று நம்புகிறேன். 9. நான் இந்த மாபெரும் பெரிய பாறையின் மீது நின்று கரங்களை உயர்த்தி தேவனை துதித்துக் கொண்டிருந்தேன். மேலும் நான்... நான் அவரை ஸ்தோத்திரித்து பின் என் கரங்களை இறக்கினபோது, நான் "கர்த்தாவே, மோசே ஒரு நாள் அந்தக் கன்மலையின் வெடிப்பில் நின்றபோது, நீர் அவனை கடந்து சென்றீர்." "நீர் என் பாவத்தை மன்னிப்பீரெனில், நீர் - நீர் என்னை மீண்டும் ஒரு விசை பரிசோதித்துப் பார்த்து, கர்த்தாவே, நீர் என்னை மன்னித்து விட்டீரென்றும், என்னுடைய அக்கிரமங்கள் எல்லாம் நீங்கிவிட்டனவென்றும், பின்பு நான் சென்று வியாதியஸ்தருக்காக ஜெபிப்பேன் என்றும் நான் அறிந்து கொள்ளும்படிக்கு, மீண்டும் ஒருவிசை மாத்திரம் கடந்து செல்லும்" என்றேன். உங்களால் இதை நம்ப முடியாமல் இருக்கலாம், ஆனால் நியாயத்தீர்ப்பீன் ஸ்தலத்திலே, நானும் நீங்களும் மீண்டும் அதை அறிக்கை செய்யும்போது, இது சத்தியமாயிருந்தது என்று அறிந்துக் கொள்வீர்கள். அங்கு... இங்கேயிருப்பதை போன்றே காற்றின் எந்த ஒரு அசைவும் இல்லாமலிருந்தது, சரியாக என் பக்கவாட்டு பாகத்தில், ஒரு சிறு சுழல்காற்று புதர்களுக்குள்ளாக சென்று, இங்கே சரியாக என்னருகில் இருந்த குகையின் பக்கத்திலே கடந்து வந்தது, பின்பு காடுகளின் வழியாக சென்றது. நான் இரு கைகளையும் உயர்த்தியவாறு ஒருசிறு குழந்தையைப் போல அழுதேன். நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்காதிருக்குமானால், நாம் தேவனிடத்தில் தைரியங் கொண்டிருக்கலாம். ஆனால் நம்முடைய இருதயத்தில் எதாவது ஒன்றை மறைத்து வைத்திருந்தால் தேவன் நமக்கு பதிலளிக்க மாட்டார். ஆகையால் நம்முடைய எல்லா பாவங்களையும் தவறுகளையும் அறிக்கை செய்து, இங்கே இந்த ஆராதனை ஸ்தலத்தில் ஒரு பெரிய ஆவிக்குரிய பொழிந்தருளுதலைத் தந்து, அது என்னவாயிருப்பினும், வியாதியஸ்தர் சுகமடையவும், பாவிகள் இரட்சிக்கப் படவும்தக்கதாக தேவன் தம்முடைய ஆவியை அளவில்லாமல் ஊற்றுவாரென நம்புகிறோம். நான் உங்களுக்காக ஜெபிப்பேன், நீங்களும் எனக்காக ஜெபியுங்கள். தேவன் தாமே நம் யாவரையும் ஒருங்கே ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது இன்றிரவு இங்கு வருவதற்கு துரிதமாக கிளம்ப வேண்டியதாகிவிட்டது. நாங்கள் நினைத்ததை விட சிறிது காலதாமதமாக கிளம்பினோம். எனவே 1 இராஜாக்களின் புஸ்தகத்தில் 17-ஆம் அதிகாரம் 14-ஆம் வசனத்தை ஒரு பொருளுக்காக எடுத்துள்ளேன். நான் இதை வாசிக்கட்டும். இதற்கு ஒரு தலைப்பை அளிக்க வேண்டுமென்றால்: இதை ஒரு செய்கைக்கான பிரதிச்செயல் என்றழைக்க விரும்புகிறேன், நீங்கள் செய்துள்ள சில செய்கைகளுக்கு எப்படி பிரதிச் செயலாற்றுகிறீர்கள். கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 11. அது ஒரு மிகவும் வெப்பமான களைப்பூட்டும் காலைப் பொழுதாயிருக்க வேண்டும். அங்கு சுமார் மூன்று வருஷமாக மழையும் இல்லை - வானத்திலிருந்து பனியும் கூட பெய்யவில்லை. நிலங்கள் தீய்ந்து போயிருந்தன; ஆகாரம் எதுவும் விளைவிக்கப்படவில்லை. அது ஒரு பயங்கரமான நேரமாயிருந்தது, தெருவெங்கும் பசியும் பீடிக்கப் சாவும் துரத்தின. ஜனங்கள் வறுமையால் பட்டிருந்தனர், தண்ணீரே இல்லாதிருந்தது. அது பாவம் மற்றும் ஒழுக்கச் சீர்கேட்டின் பிரதிபலிப்பாக இருந்தது. இன்று நம்மிடையில் உள்ள இளமைப் பருவத்தினரால் உண்டாகும் பிரச்சனைகள், விவாகரத்து பிரச்சனைகள் மற்றும் நம் தேசத்தில் செய்யப்படுகின்ற எல்லா குற்றமும், அது நம் ஒழுக்கச் சீர்கேட்டின் பிரதிபலிப்பாக உள்ளது. 12. மழையேயில்லை, ஆகவே அவள் இரவு முழுவதும் ஜெபித்திருக்க வேண்டும். யேசபேலும் அவளுடைய நவநாகரீகக் கூட்டத்தினரும் மதத்தை அவ்வளவாய் சமுக உடைமையாக்கி ஒட்டுமொத்த தேசத்தையும் விக்கிரக வழிபாட்டிற்குள் கொண்டு சென்றனர். அது ஆகாபின் ஆட்சி காலமாக இருந்தது, அவன் இஸ்ரவேலுக்கு உண்டாயிருந்ததிலேயே மிகவும் துன்மார்க்கமான ராஜாவாக இருந்தான், ஏனெனில் அவன் ஒரு எல்லைக்கோட்டு விசுவாசியாயிருந்தான். இருப்பதிலேயே மிகவும் துன்மார்க்கமான நபர், ஒரு புருஷனோ அல்லது ஸ்திரீயோ கிறிஸ்தவத்தை உரிமை கோரிக்கொண்டும் அதே வேளையில் சலிப்படைந்து, சகித்துக்கொள்ள இயலாமல் "நான் அதைச் செய்ய விரும்புகிறேன், ஆனால் என்னுடைய மதம் அதைச் செய்ய அனுமதிப்பதில்லை, ஆக நான் அதைச் செய்யக்கூடாது" என்று அவர்களை சொல்ல வைக்கின்றது. என்னால் நினைத்துப் பார்க்க முடிந்ததிலேயே, அப்படிப்பட்ட ஒரு நபர்தான் இருப்பதிலே பரிதபிக்கப்படத்தக்க ஒருவன். அத்தகைய காரியம் மட்டுமே நம்மிடம் உள்ளதென்றால், நாம் அதை அகற்றிவிட்டு வேறு ஏதாவது சிறந்த ஒன்றை நாடிச் செல்ல வேண்டும். 13. ஆகாப் தன் விக்கிரகாராதனைக்காரியான மனைவிக்கு அடிபணிந்து முழு இஸ்ரேலையும் விக்கிரக ஆராதனைக்குள் நடத்தினான். "சகோதரன் பிரன்ஹாமே, நீர் அதை இன்றுள்ள, நம் தேசத்துடன் ஒப்பிடுகிறீரே" என்று நீங்கள் கேட்கலாம். ஆம் ஐயா. நம் தேசம் முழுவதும் விக்கிரக வழிபாட்டினால் நிறைந்துள்ளது. நாம் மரத்தினால் ஆன மிருகங்களையும் இன்ன பிறவற்றையும் வணங்காமல் இருக்கலாம், அதுதான் விக்கிரகாராதனை என்று நாம் நினைக்கிறோம், ஆனால் விக்கிரகாராதனை என்பது அவை மாத்திரமே அல்ல. நாம் சில சமயங்களில் நமது வாகனங்கள், உடைகள், நாம் செய்கின்ற காரியங்கள் போன்றவற்றை விக்கிரகங்களாக ஆக்குகின்றோம். தேவனுக்கும் உங்களுக்கும் இடையில் உள்ள எதுவும் விக்கிரகமே. நாம் சில சமயங்களில் நம்முடைய சபையை ஒரு விக்கிரகமாக ஆக்குகின்றோம். நாம் ஒருபோதும் அதை செய்யலாகாது. தேவன் ஒருவரை மாத்திரமே நாம் ஆராதிக்க வேண்டும். நிச்சயமாகவே முழு தேசமும் அதன் ராஜாவின் சட்ட விதிமுறைகளால் ஆளப்பட்டு இருந்தது. மேலும் எல்லாம் சரிதான் என்று ராஜாவும் கூறினான். அது நவ நாகரீகமாயிருந்தது. நாம் இன்று இருப்பதைப் போன்றே, எல்லா ஜனங்களும் நவ நாகரீகமாக இருக்க விரும்பினர். 14. நாம் நவநாகரீகமாக இருக்க விரும்புகிறோம். நீங்கள் தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கினால் ஒரு ஸ்திரீ புகை பிடித்துக்கொண்டு "நவ நாகரீகமாக இருங்கள், இன்ன இன்ன சிகரெட்டை புகையுங்கள்" என்று சொல்வதைக் காண்பீர்கள். அடுத்ததாக மது அருந்திவிட்டு "நவநாகரீகமாக இருங்கள், இன்ன இன்ன மதுவை அருந்துங்கள்" என்கின்றனர். பாருங்கள், நாம் நவநாகரீகமாக இருக்க விரும்பவில்லை. நாம் கிறிஸ்தவர்களாக இருக்கவே விரும்புகிறோம். நவீன போக்குடன் நாம் இசைந்து செல்ல முயற்சிப்பதில்லை, ஆனால் கிறிஸ்தவர்களாக, அந்த பண்டைய சீராக செதுக்குகின்ற தேவனுடைய வார்த்தைக்கு திரும்பவும், புருஷரும் ஸ்திரீகளும் எவ்விதமாக வாழவேண்டும் என்று சர்வவல்லமையுள்ள தேவன் கட்டளையிட்டு இருந்தாரோ அவ்விதமாக வாழவும் முயற்சிக்க வேண்டும். இயேசு "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்." நாம் தேவனுடைய வார்த்தையினால் ஜீவிக்க வேண்டியதாயுள்ளது. 15. ஆனால் இன்று, நாம் அவர்களை போலவே நவநாகரீகமாக இருக்க விரும்புகின்றோம். அன்று அரசாங்கம் அதை ஆதரித்தது, இன்றும் அரசாங்கம் அதை ஆதரிக்கின்றது. ஏன், சில வருடங்களுக்கு முன்பு, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால், ஐம்பது வருடங்களுக்கு முன்பு, ஒரு ஸ்திரீ இப்போது இவர்கள் உடுத்துவதுபோல் உடையணிந்து வீதியில் செல்வாளானால், அவர்களை அவர்கள் சிறையில் அடைத்து விடுவர். ஆனால் இப்போது அரசாங்கம் அதை ஆதரிக்கிறது, நாமும் நவநாகரீகமாக இருக்க விரும்புகின்றோம். நமது அரசாங்கத்திற்கும் நமது தேசத்திற்கும் இதை நான் எல்லா மரியாதையுடனும் கூறுகின்றேன், இது ஒரு பிசாசின் கிரியையாகும். இது பிசாசு கிரியை செய்து கொண்டிருத்தலாகும். நான் வெறுமனே பண்டைய பாணியிலான வேதாகமத்தின் கலப்படமற்ற சுவிசேஷ சத்தியத்தை விசுவாசிக்கின்றேன். ஆனால் மது அருந்துவது, ஒரு ஒழுக்கக்கேடான காரியமாக ஜனங்களிடையே கருதப்பட்டது. இப்பொழுதோ, சிறு வாலிப பிள்ளைகள் கூட குடித்துக் கொண்டிருக்கின்றனர். சீட்டாடுவது கிறிஸ்தவர்களுக்கு தவறான ஒன்றாக இருந்தது. இப்போதோ தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொள்ளுகின்ற இலட்சக் கணக்கானவர்கள், தங்களின் சபைகளில் சீட்டாடிக் கொண்டு, சூதாட்டத்தில் பரிசு பொருளாக சிறிய கார்களை அளித்தல் போன்ற பொழுதுபோக்கை உடையவர்களாய் இருக்கின்றனர். அது ஒரு குலுக்குச்சீட்டு முறையேயன்றி வேறொன்றும் இல்லை. அது தவறானதாகும். அது எந்த ஒரு தேசத்திற்குமே இழிவான ஒன்றாக உள்ளது அப்படியானால் ஜீவனுள்ள தேவனுடைய சபைக்கு எப்படிப்பட்டதாக இருக்கும். ஆனால் அவர்கள் காலத்தில் அது எல்லாம் பரவாயில்லை என்று ராஜா கூறினான். எனவே மக்கள் தேவனுடைய பலிபீடங்களை அகற்றிவிட்டு பாகாலுக்கு பலிபீடங்களை கட்டினார்கள். 16. இன்று நாம் பழைய பாணியிலான பரிசுத்தம், நீதி என்பவைகளின் கொடிகளை இறக்கிவிட்டு, ஸ்தாபனத்தின் நவீன போக்குகளை உயர்த்திவிட்டோம். நாம் இந்த குறிப்பிட்ட குறிப்பிட்ட மகத்தான பிரிவைச் சார்ந்தவர்கள். நாம் ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்களாகையால் நம்மை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கிறோம். அது கிறிஸ்தவ மார்க்கம் அல்ல; கிறிஸ்தவம் என்பது தேவனுடன் மறுபடியும் பிறந்த ஓர் அனுபவமாகும், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, பாவ வாழ்க்கையிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு மனுஷருக்கும் தேவனுக்கும் முன்பாக தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் ஜீவிப்பதாகும். அது மரணத்தின் கூரை எடுத்து அகற்றிவிடுகின்றது. அப்பொழுது மரணம் ஜெயமாகின்றது. 17. இன்று காலை என் மனைவியுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். நான் அவளிடம் கூறினேன்; நான் சொன்னேன்... நாங்கள் மரணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். நான் "முப்பது வருஷத்துக்கு முன்னால் ஒரு சிறுவனாக இருக்கையில் நான் இரட்சிக்கப்பட்ட போதிலிருந்தே. நான் ஒரு திகிலடைய செய்கின்ற கனவுக்குள் இருப்பது போன்றே தோன்றுகிறது" என்றேன். அவள் "என்ன சொல்லுகின்றீர்" என்று கேட்டாள். அதற்கு நான், "இந்த ஜீவியத்தில் எனக்குள்ளே ஏதோவொன்று நிகழ்ந்ததால், வேறு எங்கோ ஒரு தேசம் உள்ளதென்று என்னை அது அறிந்து கொள்ள செய்கின்றது. நான் விழித்தெழும்பும்படிக்கு என்னையே உலுக்கிக்கொள்கின்றேன்" என்றேன். என்றாவது ஒரு நாளிலே மரணமானது என்னை அவருடைய பிரசன்னத்துக்குள் விழித்தெழச் செய்யும். நீங்கள் எப்பொழுதாவது ஒரு மோசமான சொப்பனம் கண்டதுண்டா, அதிலிருந்து வெளியே வரும்படி, நீங்கள் குலுக்கி அல்லது குதித்ததுண்டா. நீங்கள் விழித்துக் கொள்ள விரும்புகிறீர்கள் ஏனென்றால் அந்த சொப்பனத்திற்கு வெகு அப்பால் எங்கோ நிதர்சனமான ஒன்றுள்ளதென்று உங்களுக்கு தெரியும். மறுபடியும் பிறந்த ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் அந்த விதமாகத்தான் இருக்கின்றது, எப்பொழுதுமே அது அவ்விதமாகவே இருந்துள்ளது. "ஆபிரகாமும் ஈசாக்கும் மற்றவர்களும் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டனர்." அவர்கள் இனி வரப்போகின்ற ஒரு நகரத்தை நாடிச் சென்றனர். அன்றிருந்த முறைமைகளை அவர்கள் நிராகரித்தனர்...?... 18. சில வாரங்களுக்கு முன்பு நாங்கள் மளிகை கடைக்கு சென்றிருந்தபோது, ஒரு அணிந்திருந்த விதத்தை கவனித்தோம். அது நாங்கள் பெண் ஆடை நீண்ட காலமாக கண்டுவருவதிலிருந்து வழக்கத்திற்கு மாறான ஒரு காரியமாக இருந்தது. எனவே மேடா, என்னிடம் "பில்லி, என்ன ஆயிற்று?" என்று கேட்டாள். அதற்கு நான், "தேனே, காரியம் என்னவென்றால், நாம் உலகத்தின் வழக்கத்திற்கு பழகிக்கொள்ள விரும்பக்கூடாது" என்றேன். அவள் "பாரும்..." என்றாள். சில ஜனங்கள் என்னிடம் கூறியுள்ளனர், மேலும் எனக்கு கடிதங்களும் வந்திருக்கின்றன, என்னவெனில் "நீர் இவ்விதமான கருத்துக்களை கூறுவதின் மூலம் உம்முடைய ஊழியத்தை நீர் கெடுத்துக்கொள்ள போகிறீர்" என்கின்றனர். அதற்கு நான், "சத்தியத்தைப் பிரசங்கிப்பது ஒரு ஊழியத்தை அழிக்குமென்றால், அது அழிந்து போகட்டுமே" என்றேன். அது சரியே. அவள், "சரி, கிறிஸ்தவர்களை வேறுபடுத்தி உணர வைப்பது எது?" என்றாள். நான், "நான் ஸ்வீடன் (Sweden), அல்லது ஃபின்லாந்தில் (Finland) இருந்த போது அங்கு குளியல் அறையில், பெண்கள்தான் ஆண்களை குளிப்பாட்டு வார்கள். அவர்கள் செவிலியர்கள் என்று அவர்கள் கூறினர். அது அவர்களின் வழக்கமாயிருந்தது. நான் பாரிஸில் (Paris) இருந்தபோது, புருஷர்களுக்கும் ஸ்திரீகளுக்கும் கழிவறைகள் ஒன்றாகவே இருந்தது. அது பாரிஸின் வழக்கமாயிருக்கிறது. அதைப் பற்றி அவர்கள் எதுவுமே நினைக்கவில்லை" என்றேன். ஒய்.எம்.சி.ஏ வில் (YMCA) தங்கியிருந்த போது, டாக்டர். மானினனிடம் (Dr. Manninen) இதை குறிப்பிட்டேன். மேலும் அவர்கள் என்னை, அங்கிருந்த நீராவிக் குளியல் அறைகளில் (saunas) ஒன்றில் சென்று குளிக்குமாறு விரும்பினர், அது நன்றாக இருக்கிறது என்று நினைத்தேன், ஆனால் ஸ்திரீகளுடன் அங்கே இருப்பது அல்ல. மேலும் அதற்கு அவர், "ஆனால் சகோதரன் பிரன்ஹாமே," "அவர்கள் சலவை செய்யும் பெண்கள்தான்" என்றார். அதற்கு நான், "ஆனாலும், அது சரியல்ல" என்றேன். அதற்கு அவர், "அமெரிக்காவில் உங்கள் ஸ்திரீகளை மருத்துவர்கள் பரிசோதிக்கின்றனரே அதைக் குறித்து என்ன?" என்றார். புரிகிறதா? எனவே, பார்த்தீர்களா. புரிகிறதா? அவ்விரண்டு காரியத்துக்கும் எந்த வித்தியாசமுமே இல்லை. ஆனால் அது நீங்கள் எந்த தேசத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் பழக்க வழக்கங்களையும் பொறுத்ததாக உள்ளது. அன்றியும் ஒரு புருஷன் அல்லது ஒரு ஸ்திரீ தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறக்கும்போது, அப்பொழுது அவர்கள் பரிசுத்தமான ஒரு ஸ்தலத்திலிருந்து பிறக்கின்றனர். மேலும் இது அவர்களுடைய வீடல்ல, மேலும் அவர்கள் தேவன் தாமே கட்டி உண்டாக்கின வரப்போகிற நகரத்தை நாடித் தேடுகின்றனர். உங்களுடைய ஆவியானது மேலிருந்து வருகின்றது. அதற்கு அவள், "அப்படியானால் நாம் அமெரிக்கர்கள் இல்லையா?" என்றாள். அதற்கு நான், "நாம் இந்த மாம்ச சரீரத்தில் இருக்கும் வரை நாம் அமெரிக்கர்கள்தான்" என்றேன். 19. ஆனால் நாம் மறுபடியும் பிறக்கும்போதோ, நாம் பரலோகத்துக்கும் தேவனுக்கும் உரியவர்களாகிறோம், நாம் தேவனுடைய ராஜ்யத்தின் பிரஜைகளாயிருக்கிறோம். மேலும் அங்கே வாசமாயிருக்கின்ற பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வரும்போது, உங்களை நாம் செல்லப்போகின்ற அத்தேசத்திற்குரியவர்கள்போல் நடந்து கொள்ளவும், பார்க்கவும் சிந்திக்கவும் செய்வார். நிச்சயமாகவே, விக்கிரகாராதனையானது ஆட்கொண்டது. எல்லா பாரத்தின் கீழுள்ளனர், தீர்க்கதரிசி விட்டுவிடுங்கள் எல்லா பிரசங்கிமார்களும் பெரும் என்றான், ஏனென்றால் ஜனங்கள் அதை வற்புறுத்திக் கேட்டனர். ஜனங்கள் அதை வற்புறுத்திக் கேட்டதால், ஊழியமும் அதற்கு விட்டுக்கொடுத்துவிட்டது. அது அந்த விதமாகத்தான் இன்றும் உள்ளது. சபை அதை வலியுறுத்துவதன் காரணமாக, பல சிறந்த பிரசங்கிமார் அந்த பாரத்திற்கு வளைந்து கொடுக்கின்றனர். அவர்கள் அவருடைய சபையை விட்டு வெளியே சென்று விடுவர். அநேக நேரங்களில், பெரிய ஸ்தாபனங்கள், தங்களுடைய ஊழியக்காரர்களில் ஒருவர் புகை பிடிப்பதற்கு அல்லது அதுபோன்ற காரியங்களுக்கு எதிராக பிரசிங்கப்பதைக் கண்டறிந்தால், அவர்களை சபையை விட்டு வெளியேற்றிவிடுவர். மேலும் அந்த ஊழியக்காரர்களும் அதற்கு வளைந்து கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் அந்த அழுத்தத்திற்கு வளைந்து கொடுக்காத ஒருவன் அந்நாட்களில் இருந்தான். அவர்கள் அவனை வெறுத்தனர். ஆனால் அவன் ஒரு மலையின் மேல் உட்கார்ந்திருந்தான். தேவன் அவனை அங்கே செல்லும்படி கூறியிருந்தார்; அவர் அவனை காகங்களைக் கொண்டு போஷித்து, அவன் குடிப்பதற்கு தண்ணீரும் அளித்தார். ஆனால் அவன் அவர்களுடைய நவநாகரீக போக்கிற்கு அடிபணியாதவனாயிருந்தான். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின பரிசுத்த தேவன் அதே மாறாத தேவனாகயிருந்தார் என்று அவன் இன்னமும் விசுவாசித்திருந்தான். அதே விசுவாசத்தை கொண்ட சிலரை இன்றும் அவர் உடையவராக இருப்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி உடையவனாயிருக்கிறேன். உலகம் என்ன கூறுகிறது என்பது பொருட்டல்ல, அவர்கள் அந்த நவநாகரீக மார்க்கத்தின் நவீன பாணிக்கு பணிய மாட்டார்கள், மனுஷனுடைய பொதுசமுக சுவிசேஷம் என்பது அந்த மனிதர்களுக்கு இல்லை. அவர்கள் தேவன் இப்பொழுதும் பரிசுத்தர் என்று விசுவாசிக் கின்றனர். அவர் பரிசுத்தத்தை கோருகிறார் என்றும், மேலும் அவர் புதிய பிறப்பை வேண்டுகிறார் என்பதையும் அவர்கள் விசுவாசிக்கின்றனர்; பாவத்திலிருந்து வேறு பிரிதல் அவருக்கு அவசியமாகும். ஓ. அவள் அவனை வெறுத்தாள் என்பதை அறிவேன், ஆனால் தேவன் அவனை நேசித்தார். மேலும் தேவன் தம்முடைய தீர்க்கதரிசியை மலையிலிருந்து பள்ளத்தாக்கிற்கு கொண்டு வருவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். 20. மேலும் அவள் ஒரு நல்ல ஸ்திரீயாக இருந்திருக்க வேண்டும், இல்லையென்றால் தேவன் அவளைக் கொண்டு தன் தீர்க்கதரிசியை உபசரிக்கும்படிக்கு தெரிந்து கொண்டிருக்க மாட்டார். அவள் ஒரு விதவையாக இருந்த போதிலும், அவள் ஒரு வாலிப ஸ்திரீயாக இருந்திருக்க வேண்டும்; அவளுக்கு ஒரு இளம் மகன் இருந்தான். அவள் நீதியுள்ள ஒருவளாக இருந்தாள், இல்லையெனில் தேவன் அவளை ஒருபோதும் தெரிந்துகொண்டிருக்க மாட்டார். ஆனால் அவள் தன் கணவன் இறந்த சில வருஷங்களுக்கு பிறகு, அவ்வாறு கடந்து செல்கையில், பானையில் மா குறையத் தொடங்கியது. மேலும் நிச்சயமாகவே, ஒரு தாயானவள் செய்வது போன்றே, தன் சிறு பையனுக்கு உணவளிக்கும்படியாக, அவள் தனக்கு குறைவான அளவு மாத்திரம் ஒதுக்கிக்கொண்டாள். இறுதியாக அவனுடைய ஆடைகள் கிழிந்து கந்தலாவதை காணத் தொடங்கினாள். அவளுடைய முழங்கைகளும் ஒருவேளை அந்த ஆடையின் கைப்பக்கத்தினூடாக வெளியே தெரிந்திருக்கும். ஒவ்வொரு இரவிலும் அவள் ஒரு சிறு சோள அடையை அவனுக்கு செய்து கொடுத்து, அவனை தூங்க வைத்திருப்பாள். ஒரு வேளை ஒவ்வொரு இரவிலும் அவன் எழுந்து, "அம்மா, சாப்பிடுவதற்கு சிறிதேனும் செய்து தரமுடியாதா?" என்று எனக்கு பசிக்கிறது. கூறியிருப்பான். அடுத்த நாளில் அவள் தனக்கான அடையை எடுத்துக்கொள்ளாமல் அவனுக்கு கொடுத்து இருக்கலாம். மரணம் பின்தொடர்ந்து வாசலருகே வந்துவிட்டது, அது தீர்ந்த பின் வேறு மாவும் இல்லை, மாவுடன் கலப்பதற்கு எண்ணெயும் இல்லை. பானையில் மா குறைய குறைய மரணம் நெருங்கி நெருங்கி அருகே வந்து கொண்டிருந்தது. இறுதியாக, ஒருக்கால் ஒரு வாரத்துக்கு இரண்டு அடைகள் கொண்டிருந்திருக்கலாம், அதன் பின்பு ஒரே ஒரு அடை மாத்திரமே மீதியாயிருந்தது. 21. தேவன் எவ்வாறு காரியங்களை நிகழ்த்துகிறார் என்பது விசித்திரமாக இல்லையா? அவர் நம்மை கடைசி வரை செல்ல விடுவார், இறுதி கட்டம் வரை. உங்களுக்கு தெரியுமா, அவர் - அவர் அப்படி செய்ய விரும்புகின்றார். அவர் அதை எபிரெய பிள்ளைகளோடு செய்தார். யாரை நம்ப வேண்டும் என்று அவருக்கு தெரியும், எனவே அவர் அச்சிறுவர்கள் அக்கினி சூளைக்கு நடந்து சென்று, நெருப்பின் வாசனையை கிட்டத்தட்ட முகரும்வரைச் செல்ல அனுமதித்தார், அதுவரையிலும் அவர் அசையவில்லை. ஆனால் அவ்வேளை வரும்போது, அவர் செயல் புரிவார். அவர் செயல் புரிவார், ஆனால் அவர் தம்முடைய சொந்த வேளை வரும்வரை காத்திருக்கிறார். அவர்கள் எப்படியாக எதிர்கொள்கின்றனர் என்பதை அவர் காண விரும்பினார். அவர்கள் தங்கள் நிலையில் உறுதியாக நிற்பார்கள் என்பதை அவர் அறிவார். மேலும் நீங்கள் உங்கள் நிலையில் உறுதியாக தரித்திருக்கிறீர்கள் என்று அவர் அறிந்துகொள்கையில்.... பிசாசு உங்களை பாதையின் இறுதி கட்டத்திற்கு கொண்டு செல்ல அவர் அனுமதிப்பார். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், அவர் அங்கேயேதான் இருக்கிறார். நீங்கள் எதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்களோ அதில் அசலாகவே உறுதியுடன் இருக்கிறீர்களா என்று அவர் காண விரும்புகிறார். "ஓ. நான் தேவன் ஒரு சுகமளிப்பவர் என்று விசுவாசிக்கின்றேன். ஆம், நான் நிச்சயமாகவே அதை விசுவாசிக்கின்றேன்" என்று கூறி, மறுநாள் உனக்கு இன்னமும் வேதனை இருக்கும் போது, "பாருங்கள், ஒருவேளை நான் அதை பெற்றுக்கொள்ளவே இல்லை" என்கிறீர்கள். நிச்சயமாகவே நீங்கள் அதை பெற்றுக் கொண்டீர்கள், அவர் நீ என்ன கூறினாயோ அதன் பேரில் எவ்விதமாக செயலாற்றுகிறாய் என்று காண விழைகின்றார். நீங்கள் "ஓ, தேவனுக்கு ஸ்தோத்திரம், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் நான் விசுவாசம் கொண்டுள்ளேன்" என்கிறீர்கள். முதலாவது ஒரு சிறிய சோதனை வந்த உடனேயே, ஒரு வண்டை போல பறந்து விடுகிறீர்கள். அவர் உங்கள் செயலின் மேல் நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தைக் காண விரும்புகிறார். அவர் உங்களை சோதிக்க முயற்சிக்கின்றார். "தேவனிடத்தில் வரும் ஒவ்வொரு மகனும் முதலில் சிட்சிக்கப்பட்டு சோதிக்கப்பட வேண்டும்." அவரிடம் வரும் ஒவ்வொரு பிள்ளையையும் அவன் எவ்விதம் செயல்படுகிறான் என்று காணும்படியாக அவர் சோதனைக்குட் படுத்துகிறார். 22. யாரேனும், ஒரு வேதியியலாளர், வேறு எவராயினும் எப்போதும் ஏதேனும் ஒன்றைச் சோதனை செய்வதுண்டு. பெரிய குழாய்கள்... நான் ஒரு எரிவாயு நிறுவனத்தில் வேலை செய்திருக்கின்றேன். அவர்கள் அந்த குழாய்களை, அதின் இறுதிமுனைப் பகுதியில் ஒரு அடைப்பானையும் மற்றும் தடுப்பிதழையும் (valve) வைத்து அடைத்து பரிசோதிப்பார்கள். அக்குழாயினுள் வெடித்து விடக்கூடிய ஏதேனும் ஒரு சிறு துளை உள்ளதா என்பதனை அறிய அவர்கள் எவ்வளவு அழுத்தத்தை அதனுள் செலுத்துவார்கள் என்று இப்பொழுது எனக்கு ஞாபகம் இல்லை. அச்சோதனையை அவைகள் தாங்க முடியாவிட்டால், அந்த குழாய்களை ஓட்டை உடைசல் குவியலுக்குள் வீசி விடுவார்கள். நீங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் போது. தேவனுக்காக ஒரு சாட்சியாக உபயோகப்படுத்தப்பட தீர்மானிக்கும் போது... இங்குள்ள சக்கர நாற்காலியில் இருக்கும் பெண்மணியைப் போல, அந்த மனிதன், அந்த சிறு பையன், அங்கேயிருக்கின்ற உங்களில் சிலர், ஒருவேளை நீங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கலாம். மேலும் நீங்கள் ஏன் இந்த சோதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள் என்று ஆச்சரியப்படலாம். உங்கள் சாட்சியைப் பயன்படுத்த தேவன் ஆயத்தமாக்கிக் கொண்டிருக்கிறார், ஆனால் நீங்கள் எப்படி நடந்து கொள்ளப்போகிறீர்கள் என்பதை அவர் பார்க்க விரும்புகிறார், எனவே அவர் அழுத்தம் கொடுக்கிறார். நீங்கள் வெடித்துவிடுவீர்களானால், பாருங்கள் அப்பொழுது, அவர் உங்களைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. ஆனால் நீங்கள் தொடர்ந்து பற்றிக்கொண்டு, சோதனையில் நிலைத்திருப் பீர்களானால்... 23. இந்த சிறு பெண், அவள் தனக்கும் தன்னுடைய மகனுக்கும் ஒரு சிறு அடையை செய்வதற்கான, கைப்பிடியளவு மாத்திரம் பானையில் மாவும், ஒரு கரண்டி எண்ணெயுமே உள்ளதென்பதை அன்று முந்தைய இரவில் அறிந்திருந்தாள், அதை என்னால் கற்பனை செய்துப் பார்க்க முடிகிறது, அதன் பிறகு அவளும் அவளுடைய மகனும் மரித்துப்போகயிருந்தனர். அதற்குமேல் எங்கும், வேறு எதுவுமே இல்லை. என்னால் கற்பனை செய்துப்பார்க்க முடிகிறது. இரவு முழுவதும் நடந்து கொண்டு தன் மகனின் மெலிந்த கைகளை தட்டி கொடுத்தவாறு, அவனுடைய கந்தலான இரவு உடையைப் பார்த்திருப்பாள். அவன் தூக்கத்தில் திரும்பி, "அம்மா, எனக்கு பசிக்கிறது' என்று சொல்வதைக் கேட்டிருப்பாள். ஆனால் அவனுக்கு கொடுக்கும்படி அங்கே ஒன்றுமேயில்லை. அது விசித்திரமானதாக இல்லையா, நாம் எப்படி செய்ய வேண்டுமென்று நமக்குத் தெரிந்த அனைத்தையும் நாம் செய்துவிட்ட பிறகு... அவள் ஜெபித்த பிறகும், பின்பு - பின்பு முடிவு வருவதைக் கண்டாள்...' இங்கிருக்கின்ற புற்றுநோயினால் பாதிக்கப் பட்டுள்ள உங்களில் சிலரைப் போல. நீங்கள் அந்த இறுதி கட்டத்தைக் கண்டு, ஏன் என்று வியக்கிறீர்கள். "கர்த்தாவே, நான் ஏதேனும் செய்யாமல் தவறி விட்டேனா?" என்று அவள் தன்னைப் பரிசோதித்துப் பார்த்தாள். 24. தேவன் சோதிக்கிறார். யோபுவைப் போல, அவர்கள் அவனை ஒரு இரகசிய பாவி என்று குற்றம் சாட்டினார்கள். யோபுவோ ஒரு நீதிமானாயிருந்தான். அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை. அப்படியிருந்தும், தேவன் அவனுக்குண்டாயிருந்த அனைத்தையும் எடுத்துக்கொள்ள பிசாசை அனுமதித்தார். மேலும் அவர்கள் அவனை ஒரு இரகசிய பாவி என்று குற்றம் சாட்டியபோதும், தேவனுக்கு முன்பாக தான் ஒரு நீதிமானாயிருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். தான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனாலும் தேவன், நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று காண்பதற்காக அக்காரியங்களை அனுமதிக்கிறார். பாருங்கள், அவருக்கும் சாத்தானுக்கும் கருத்துரையாடல் நடந்தது. சாத்தான், "நான் அவனை உம்முடைய முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கச் செய்வேன்" என்றான். அதற்கு தேவன், "அதை உன்னால் செய்ய முடியாது" என்றார். சோதனைகள் உங்களுக்கும் சோதனை வருகிறது, எனக்கும் சோதனை வந்துதான் ஆகவேண்டும். வருகிறது. நாம் எல்லோரும் அச்சோதனைகளினூடாக கடந்து செல்ல வேண்டும். வேதம் கூறுகிறது, நாம் அதை சகியாதிருந்தால், அது நாம் முறைதவறிப் பிறந்த பிள்ளைகளாயிருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறது: நமது சாட்சி சரியானதாக இருக்கவில்லை, நாம் தேவனுடைய உண்மையான பிள்ளைகளாயிராமல்,நாம் முறைகேடான வழியில் பிறந்த பிள்ளைகளாகிறோம்; நாம் தேவனுடைய பிள்ளைகள் அல்ல. நாம் வெறுமனே அவ்வாறு உரிமை கோரிக்கொள்கிறோம். 25. நீங்கள் பரிசுத்த ஆவியை பெறுகையில், அவர்கள் உங்களைப் பார்த்துச் சிரிக்கும் போது, நீங்கள் அவர்களுடன் சேர்ந்து உலகத்திற்குள் திரும்பி போவீர்களானால், அது நீங்கள் அதை ஒருபோதும் பெற்றுக்கொள்ளவேயில்லை என்பதையே காட்டுகிறது. தேவன் உங்களுக்கு ஏதோவொன்றை செய்திருக்கிறார் என்று அறிந்து, உங்களுடைய சுகமாகுதலைக் குறித்து சாட்சி பகரும்போது, உங்கள் அண்டை வீட்டார்கள், "உனக்கு பித்துப்பிடித்துவிட்டது; நீ சுகமடையவில்லை" என்று கூறுகையில், நீ "பாருங்கள், நான் ஒருக்கால் சுகமடையாமல் இருக்கலாம்" என்பாயானால், அது துவக்கத்திலேயே நீ சொஸ்தமாக்கப்பட தகுதியற்றவன் என்பதையே காட்டுகின்றது. உங்களுடைய சாட்சியில் நிலைத்திருங்கள், விட்டுவிடாமல், நீங்கள் அங்கேயே தரித்துநில்லுங்கள். யோபு, "என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்" என்றான். மின்னல்கள் பிரகாசித்தன; இடிகள் முழங்கின. அவன் இறுதிவரை பற்றியிருந்தான். இந்த ஸ்திரீ, தனக்கு தெரிந்த அனைத்தையும் செய்திருந்தாள், அப்படியிருந்தும், தேவன் அமைதியாக இருந்தார். ஆனால் உண்மையான விசுவாசமானது நோக்கத்தை அறிந்து கொள்ளும்போது, அது மவுனமாயிருந்து, அமைதலுடன் இளைப்பாறும், ஏனெனில் அது சம்பவிக்கப்போகிறது என்று அது அறிந்துள்ளது. அதை மறந்து விடாதீர்கள். விசுவாசமானது பூரணமான நிச்சயத்தோடு இளைப்பாறும். காரியம் என்னவாக இருந்தாலும், எவ்வளவு முரணாக தோன்றினாலும், விசுவாசம் நிச்சயமுடையதாய் இளைப்பாறுகின்றது. விசுவாசம் கன்மலை மீது அதன் நிலைப்பாட்டை வைத்து, உங்களுடைய சொந்த அன்பிற்கினிய இருதயத்தின் பாகமானவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை அல்லது தண்ணீர்களை நோக்கிப் பார்த்தாலும், விசுவாசமானது கடலைக் கடந்து, "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்று கூறிய அவரை நோக்கிப்பார்க்கும். 27. நாம் விசுவாசத்தை பற்றி கூறுகிறோம். நாம் விசுவாசத்தை பற்றி பேசுகிறோம், ஆனால் நாம் எதைப் பற்றி பேசுகிறோம் என்பதை நாம் அறிந்திருக்கிறோமா என்று சில நேரங்களில் நான் வியக்கிறேன். அது விசுவாசம் என்பதற்கு பதிலாக நம்பிக்கையாக உள்ளது அல்லவா என்று நினைக்கிறேன். விசுவாசம் அசைவதே இல்லை. காரியம் எவ்வளவு முரணாக தென்பட்டாலும், விசுவாசம் சரியாக அங்கேயே தரித்திருக்கும். அது ஒருபோதும் நகர்வதில்லை. மோசே கீல் பூசப்பட்ட ஒரு சிறு நாணற்பெட்டியில் வைக்கப்பட்டு, குழந்தைகளை உண்டுபெருத்த கொழுத்த முதலைகள் இருந்த அந்த நதியிலே விடப்பட்ட போது, அவனுடைய தாய், யோகெபேத், நிச்சயத்துடன் கூடிய விசுவாசத்துடன், பிள்ளையை தண்ணீரில் விட்டாள், தேவன் அவனைத் தேவனுடைய அந்த அழகுள்ள திரும்ப எழுப்புவார் என்று அறிந்து, அவள் அவனை நேரே மரணத்தின் பிடியில் தள்ளினாள். ஆமென். அது என்னை பக்திவசத்திற்குள்ளாக்குகின்றது. தேவன் அவனை பத்திரமாக பார்த்துக் கொள்வார் என்று அவள் அறிந்திருந்தாள். அவனுக்கு ஒரு பேர் கூட இல்லாத போதிலும், தேவன் அவனுக்கு ஒரு பேரைக் கொடுப்பார். உலகில் இதுவரை இருந்ததிலேயே மிக இனிமையான சிறு குழந்தையை, தான் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கட்டளைகளைப் பின்பற்றுவதை அறிந்திருந்ததால், அவள் மரணத்தின் பிடியில் தள்ளினாள். மேலும் விசுவாசமானது, தேவன் அதைக்குறித்து ஏதாவதொன்றைச் செய்வார் என்று நிச்சயமுடையதாக இருந்தது, ஏனெனில் அவன் ஒரு இரட்சகனாக பிறந்திருந்தான் என்று அவள் அறிந்திருந்தாள். 28. நீங்கள் பரிசுத்த ஆவியை உடையவர்களென்றும், தேவனுடைய ஆவியினால் பிறந்தவர்களென்றும் தேவனின் வாக்குத்தத்தங்கள் எல்லாம் உங்களுக்குரிய தென்றும் நிச்சயமுடையவர்களாய் இருந்தால், பிசாசு என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை, நீங்கள் இன்னும் உறுதியோடு இருக்க முடியும். விசுவாசமானது அதின் அசைக்க முடியாத நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. விசுவாசமானது நிலையில்லாமல் மாறிக் கொண்டிருக்கின்ற மனிதனின் மத தத்துவத்தின் மேல் நிலைக் கொள்ளாது, ஆனால் அது என்றென்றும் அசைக்க முடியாத கன்மலையின் மேல் அதின் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது, அது அங்கே உறுதியுடன் இளைப்பாறுகிறது. எது வந்தாலும் சென்றாலும் ஒரு பொருட்டல்ல, என் விசுவாசம் உறுதியாய் பற்றிக்கொண்டிருக்கிறது. நான் எவ்வளவு வியாதியுற்றாலும் சரி, அது எவ்வளவு எதிர்மாறாக காட்சியளித்தாலும் சரி, மேலும் இது எப்படி இருப்பினும், என்னுடைய விசுவாசமானது திரைக்குள்ளாக நங்கூரமிடப் பட்டிருப்பதால், எதுவுமே என்னை அசைக்க இயலாது. இப்போது, நீங்கள் அதை பொய்கூறி ஏமாற்ற முடியாது, நீங்கள் அதைப் பெற்றிருக்க வேண்டும். உங்களால் அதை ஏமாற்றிக் காண்பிக்க முடியாது. நீங்கள் வெறுமனே பேசி ஏமாற்றும் போது சாத்தான் அதை அறிந்துள்ளான், நீங்கள் அதைப் பெற்றிருந்தால் அவன் அதையும் அறிந்திருக்கிறான். நீ ஒரு கிறிஸ்தவனாயிருந்து, உன் இருதயம் உன்னைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருந்தால், அப்பொழுது தேவன் தம்முடைய புஸ்தகத்தில் அளித்துள்ள ஒவ்வொரு வாக்குத் தத்தங்களின் பேரிலும் உங்களுக்கு உரிமை உண்டு. அது உங்களுடையதாகும். அதன் பின்விளைவுகள் எதுவாக இருந்தாலும், பலன் என்னவாக இருந்தாலும் நீங்கள் அதை நோக்கிப்பார்க்க வேண்டாம்; வாக்குத்தத்தத்தின் மேல் தேவன் உங்களுக்குக் கொடுத்த விசுவாசத்தை நோக்கிப்பாருங்கள். அப்பொழுது அது அங்கேயே நிற்கும்; அதை எதுவுமே அசைக்காது. 29. அவள் எப்படி உணர்ந்திருப்பாள், "யேகோவா செய்ய வேண்டுமென்று கொடுத்த ஒவ்வொன்றையும் நான் செய்தேன். தேவன் என்னிடம் செய்யும்படி சொன்ன அனைத்தையுமே செய்து முடித்தேன்; அப்படியிருந்தும் பானையில் மா குறைந்து ஒரு சிறு கைப்பிடியளவே உள்ளது, அதனுடன் பிசைய எண்ணெயும் ஒன்றிரண்டு கரண்டி மட்டுமே உள்ளது." ஆனால் தேவன் அமர்ந்திருந்தார், மேலும் தூதர்கள் ஒவ்வொரு மூலையிலுமிருந்து அவள் எப்படி எதிர்கொள்ளப் போகிறாள் என்று கவனித்துக் கொண்டிருந்தனர். அது தேவன்தான் என்றும், நீங்கள் செய்ய வேண்டுமென்று தேவன் வைத்திருந்த ஒவ்வொரு தேவையையும் நீங்கள் பூர்த்திச் செய்துள்ளீர்கள் என்றும், நீங்கள் அறிந்துள்ள ஒவ்வொரு வேதவாக்கியத்தையும் நீங்கள் கைக்கொண்டுள்ளீர்கள் என்றும் நிச்சயமுடையவர்களாய் இருந்தால்; நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள்; நீங்கள் ஞானஸ்நானம் பெற்றுள்ளீர்கள்; நீங்கள் ஆவியால் நிரப்பப்பட்டிருக்கிறீர்கள்; தேவன் அதைச் செய்வார் என்று உங்கள் இருதயத்தில் உறுதியைப் பெற்றுள்ளீர்கள் என்றால், அப்படியானால் தொடர்ந்து பற்றிக்கொண்டேயிருங்கள், தேவன் உங்களை விடுவிப்பார். அவர் ஒருபோதும் தவறுவதேயில்லை. அதைப் பற்றிக்கொள்ளுங்கள். 30. இது அந்த கிறிஸ்தவ ஸ்திரீக்கு எவ்வாறு காணப்பட்டிருக்கும்... ஆகாபும் யேசபேலும் தன்னுடைய அரமனையில் புசிப்பதற்கு மிகுதியானவற்றுடன் இருந்திருக்கலாம். துன்மார்க்கன் ஏன் செழிக்கிறான் என்று நாம் வியப்படைவதுண்டு. தாவீது அதை ஒருமுறை கேட்டான், ஆனால் "அவனுடைய முடிவைப் பார்" என்று வார்த்தை திரும்ப வந்தது. தேவன் உங்களுடன் இருக்கிறார் என்பதற்கு செழிப்பாயிருத்தல் ஒரு அடையாளமல்ல. அப்படியிருக்குமாயின் நமது தேசமும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது, எல்லா ஜனங்களும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர், அந்நாளிலும் அவ்வாறுதான் இருந்தது: எனவே செழிப்பு என்பது நேர்மாறானது. இந்த பரிதாபகரமான ஸ்திரீ இரவு முழுவதும் அந்த சிறு குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளால் உறங்க முடியவில்லை. முதலாவதாக, அவள் மிகவும் பசியாக இருந்ததால் அவளால் தூங்க முடியவில்லை. மேலும் அவளுக்கும் மரணத்திற்கும் இடையே ஒரு கைப்பிடியளவு மா மட்டுமேயுள்ளது என்று அறிந்திருந்தாள். அவளால் என்ன செய்யக்கூடும்? அவளால் அதற்குமேல் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் நலிவுற்றிருந்தாள். அவள் தள்ளாடிக் கொண்டே நடந்து கொண்டிருந்தாள். அந்த சிறுவன் வாய்நிறைய அப்பத்திற்காக அழுது கொண்டிருந்தான்... இருப்பினும், அவள் ஒரு கிறிஸ்தவளாக இருந்தாள், நாம் இன்றைய நாளில் கிறிஸ்தவள் என்று அழைக்கும் வண்ணமாக அவள் யேகோவாவை விசுவாசிப்பவளாக இருந்தாள். பற்றுறுதி உடையவளாய் இருந்தாள், மற்ற எல்லா ஸ்திரீகளைப் பார்க்கிலும் தேவன் அவளைத் தெரிந்து கொண்டது அதை ரூபிக்கிறது. அவர் அவளைத் தெரிந்தெடுத்தார். மேலும் அவளால் இயன்ற எல்லாவற்றையும் செய்திருந்தாள். 31. பகல் பொழுதாகும்போது, பறவைகள் சத்தமாக ஒலிகூட எழுப்பியிருக்காது; அவையாவும் ஆகாரமில்லாமல் மாண்டுபோயின. பொழுது விடிந்து அறையினூடாக வெளிச்சம் வரத்துவங்கியது. அவள் அந்த பழைய அசையும் நாற்காலியில் அமர்ந்து, கைகளை பிசைந்துகொண்டு, நோக்கிப் பார்க்கையில் அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வழிகிறதை என்னால் காண முடிகிறது. சிறு பையன் இரவில் சரியாக தூங்க முடியாமல்: "அம்மா, உங்களால் ஒரு சிறு துண்டு அப்பத்தை கூட காண முடியவில்லையா? அப்பா ஒரு நல்லவராக இருந்தார். தேவன் அவரை எடுத்துக் கொண்டார். என்ன ஆயிற்று, அம்மா?" ஆனால் அந்த ஸ்திரீ உறுதியாயிருந்தாள். அவள் தேவன் தான் செய்யவேண்டுமென்று வைத்திருந்த ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்திருந்தாள் என்பதை அவள் அறிந்திருந்தாள். அவளிடம் கொஞ்சம் கைப்பிடியளவு மாவே இருந்தது. அவள் உள்ளே சென்று இந்த சிறு கைப்பிடியளவு மாவை எடுத்துப் பானையில் இட்டு, எண்ணெயை அதனுடன் ஊற்றிப் பிசையத் தொடங்கினாள். 32. இப்பொழுது, அந்த மா கிறிஸ்துவாகும். கிறிஸ்துவே அந்த போஜன பலியாயிருக்கிறார். உங்களில் எந்த ஒரு குருவானவரும் clergyman) அதை அறிவீர்கள். போஜனபலிக்கான மா அரைக்கப்படும்போது, அதை ஒரு குறிப்பிட்ட திரிகையைக் கொண்டு அரைக்க வேண்டும். ஒவ்வொரு திரிகையும் மாவை சீராக ஒரே அளவில் அரைக்க வேண்டும். ஏன்? ஏனென்றால் கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அப்போது அவர் என்னவாக இருந்தாரோ, இன்றிரவும் அவர் அப்படியே இருக்கின்றார். இன்றிரவு அவர் என்னவாக இருக்கிறாரோ, அவர் எப்போதும் அதே போன்றே இருப்பார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். இப்பொழுது, எண்ணெய் ஆவிக்கு அடையாளமாக இருக்கின்றது. மேலும்... நாம் அதை வேதவாக்கியங்களின் மூலம் அறிகிறோம். அதன் காரணமாகவே நாம் எண்ணெயால் அபிஷேகம் செய்கிறோம். 33. எலியா, ஒரு சமயம் தீர்க்கதரிசிகளின் வித்தியாசாலைக்கு (school) வந்திருந்தபோது, அந்த வித்தியாசாலையிலிருந்த அவர்களில் சிலரை வெளியே அனுப்பினான், தீர்க்கதரிசிகளாகிய அவர்களில் சிலருக்கு பேய்க்கொம்மட்டிக் காய்க்கும் பட்டாணிக்கும் (peas) வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் அவன் மடி நிறைய பேய்க்கொம்மட்டிக் காய்களைக் கொண்டுவந்து, அவைகளை பானையிலே போட்டான். பின்பு அவர்களில் ஒருவன், "பானையில் சாவு இருக்கிறது" என்று சத்தமிட்டான். அதற்கு எலியா, "உணர்ச்சிவசப்படாதே" என்றான். அவன் சென்று ஒரு கைநிறைய மாவை எடுத்து அதைப் பானையிலே போட்டு, "புசியுங்கள்" என்றான். ஏன்? கிறிஸ்து மரணத்தில் போடப்பட்ட போது, மரணத்திற்கு பதில் ஜீவன் வருகிறது. நீ எவ்வளவு தூரம் சென்றுவிட்டிருந்தாலும், எவ்வளவு ஆழத்திற்குள் அமிழ்ந்திருப்பினும், எவ்வளவு ஒழுக்கமற்றவனாக இருந்தாலும், எவ்வளவு தரம் தாழ்ந்திருப்பினும், நீ எவ்வளவு பாவம் நிறைந்தவனாய் இருந்தாலும் அதைக்குறித்து கவலையில்லை, கிறிஸ்து உன இருதயத்துக்குள் வரும்போது, மரணமானது மறைந்துபோய், அந்த ஸ்தலத்திற்குள்ளே ஜீவன் கடந்து வருகின்றது. மரணம் இருந்த பானையிலிருந்து ஜீவன் வந்தது. புற்றுநோய் உன்னை அரித்திருந்தாலும், காசநோய் என்றாலும், மருத்துவர் வேறு எதுவுமே செய்ய இயலாதென உன்னைக் கைவிட்டிருந்தாலும், ஒரு கைநிறைய கிறிஸ்துவை உனக்குள் வரவிடுவாயாக. ஒரு கைநிறைய மதமார்க்கத்தையல்ல, இப்பொழுது - நேற்று இருந்தது போலவே மாறாத இயேசுவை, ஒரு கைநிறைய பரிசுத்த ஆவியாகிய கிறிஸ்துவை, அசலான விசுவாசத்துடன் உன் இருதயத்திற்குள் வர அனுமதிப்பாயாக, அப்பொழுது மரணம் பறந்து சென்று விடும்; ஜீவனானது அதன் இடத்தை எடுத்துக்கொள்ளும். போஜனபலியாகிய.... 34. எண்ணெய் ஆவியாக இருக்கிறது. இப்போது, அது என்ன? கிறிஸ்துவே வார்த்தையாக இருக்கின்றார். "ஆதியிலே வார்த்தை இருந்தது; அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது; அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்." மேலும் அந்த ஆவியானவர்... இயேசு கிணற்றண்டை இருந்த ஸ்திரீயிடம், "தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுங்காலம் வரும், தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி அவர் விரும்புகிறார்." அதுவே ஆவியுடன் கூடிய வார்த்தையாயிருக்கிறது. சிலரிடம் வார்த்தை இருக்கிறது, மற்றவரிடம் ஆவி உள்ளது. ஆனால் நீங்கள் ஆவியையும் உண்மையையும் ஒன்றுசேர பெறும்போது, ஏதோவொன்று சம்பவித்தாக வேண்டும். 35. மேலும் அது வெறுமனே சிறிதளவு மாத்திரம், வெறுமனே கொஞ்சம் மாத்திரமே இருந்தது, ஆனால் அவளுக்கு தேவைப்பட்டது எல்லாம் அது மாத்திரமே. தேவனே, இது ஜனங்களின் இருதயத்திற்குள் ஆழமாக செல்வதாக. நீங்கள் உங்களுடைய கடைசி ஒரு கைப்பிடியளவு என்ற நிலையை அடைந்திருக்கலாம். "சகோதரன் பிரன்ஹாம், எனக்கு அதிக விசுவாசம் இல்லை, என்று ஜனங்கள் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் எதைக் கொண்டுள்ளீர்களோ, அது உண்மையான விசுவாசமாக இருக்குமாயின், அதை தேவனுடைய வார்த்தையுடன் சேர்த்து கலந்துவிடுங்கள். அது என்ன செய்கிறது என்று பாருங்கள். நீங்கள், "பாரும், சகோதரன் பிரன்ஹாம், நான் எல்லா மருத்துவரிடமும், மருத்துவமனைக்கும் சென்றுவிட்டேன், ஓ, நான் என் பாவங்களுக்காக சபையில் சேர்ந்துகொண்டேன், நான் இதைச் செய்திருக்கிறேன்" என்று கூறலாம். நீங்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறீர்கள் என்பதைக்குறித்து எனக்கு அக்கறையில்லை, இன்றிரவு இங்கு வருவதற்கு உங்களுக்கு போதுமான விசுவாசம் உண்டாயிருக்கு மாயின், அது சிறிதளவு விசுவாசமாயிருப்பினும், அதை வார்த்தையுடன் சேர்த்து கலந்துவிடுங்கள்; ஆயத்தமாகுங்கள்.. 36. அவள் அதை ஒருசேர கலக்கினாள். அவளுக்கும் மரணத்திற்கும் இடையே இருந்த ஒரே காரியம் அது மாத்திரம்தான். இன்றிரவு உங்களுக்கும் மரணத்திற்கும் இடையே உங்களிடம் எஞ்சியிருக்கும் ஒரே ஒரு காரியம் அதுவாக இருக்கலாம், அதென்னவெனில் அதை விசுவாசிக்கும்படிக்கு உங்களுடைய இருதயத்தில் ஒன்றுதிரட்டி சேர்க்கக்கூடிய கொஞ்சம் ஆவிதான் அது. தேவனுடைய நித்தியமான வார்த்தையுடன் அதைச் சேருங்கள். அவள் செய்த பொழுது, அவள் அந்த கிழிந்த திரையை இழுத்து, நோக்கிப் பார்ப்பதை என்னால் காண முடிகிறது. அந்த சிறுவன் தன் சிறு வயிற்றைப் பிடித்துக்கொண்டு. "அம்மா, அம்மா, அந்த சின்ன அடையை செய்யபோகிறீர்களா?" என்கிறான். அதற்கு அவள், "ஆம், அன்பே. சற்றே சில நிமிஷங்கள் பொறுத்துக்கொள். அம்மா அதை பிசைந்துகொண்டிருக்கிறேன்" என்றிருப்பாள். "அம்மா, அதை இரண்டாக பிட்டு, ஒரு பாதியை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்." தேனே, அதை நாம் பார்த்துக்கொள்ளலாம்." அவளிடம் இருந்தது... இப்போது அது என்னவாக இருந்தது? வார்த்தையும் ஆவியும் ஒன்றாக கலந்தது. 37. அவள் பொறுக்கும்படி முற்றத்திற்கு சென்றாள்... அதை கவனித்தீர்களா, வேதம் கூறுகிறது, "இரண்டு விறகு" அந்த இரண்டு விறகு என்பது என்ன? சிலுவையாகும். நல்ல வேட்டைக்காரர்கள் அல்லது காட்டில் வசிப்பவர்களுக்குத் தெரியும், நீங்கள் எப்போதுமே... நெருப்பு தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதற்கான வழிமுறை என்னவெனில் இரண்டு மரத்துண்டுகளை ஒன்றுக்கொன்று குறுக்காக வைத்து அதன் மத்தியில் நெருப்பை பற்றவைக்க வேண்டும். இரவு முழுவதும், அது எரிய எரிய, நீங்கள் அதன் முனையை தள்ளிக் கொண்டேயிருக்கலாம். அப்படியே சிலுவையின் மையத்தில் தான் தேவனுடைய பலியும் தொங்கினார். அவள் முற்றத்திற்கு சென்று இரண்டு விறகுகளை பொறுக்கினாள். அவள் நிமிர்ந்து பார்த்தாள், கொப்புளம் உண்டாக்கத்தக்க சூடான காற்று வீசுவதால், மரத்தில் ஒரு இலையும் கூட இல்லை, முற்றத்தில் புற்களும் இல்லை. அங்கே முன்பு அந்த மரம் இருந்த இடத்தில், வெறும் இரண்டு குச்சிகள் மட்டுமே மீதமிருந்தன. அவள் சென்று அதைப் பண்ணுவதற்காக அவற்றை பொறுக்கினாள். 38. அது என்னவாயிருக்கிறது? தன்னையே பலியாக செலுத்தும்போது... நீங்கள் வார்த்தையை ஆவியுடன் அல்லது ஆவியை வார்த்தையுடன் கலந்த பின்புதான் சிலுவையில் உங்களையே ஆயத்தமாகுகிறீர்கள், மேலும் "நான் ஜீவித்தாலும் பலியாக செலுத்த மரித்தாலும், கர்த்தாவே, எனக்கு செய்யத் தெரிந்த எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டேன், நான் அந்த இரக்கத்தின் உச்ச விளிம்பிற்கே வருகின்றேன்... என் சுய நம்பிக்கைகளை பலியாக செலுத்துகிறேன்... அதை பற்றி இனி நான் நினைக்கப்போவதில்லை; நான் இனிமேல் யுக்திவாதம் செய்யப்போவதில்லை. யுக்திப்பூர்வமான விளக்கங்களை நான் புறம்பே எறிந்துவிடுகிறேன். கர்த்தாவே, நான் அதை வெறுமனே விசுவாசிக்க மாத்திரம் செய்வேன், ஏனெனில் உம்முடைய ஆவி, உம் வார்த்தை, உம் சத்தியம், அது உம்முடைய மாவும் எண்ணெயாக இருக்கிறது. என்னை நானே சிலுவையில் பலியாக செலுத்துகிறேன்." என்று நீங்கள் கூற ஆயத்தமாவீர்கள். அதைத்தான் அது சொல்லிக்கொண்டிருந்தது. பலியாக செல்ல, அவள் அந்த இரண்டு விறகுகளை பொறுக்கினாள். இது எல்லாம் நடந்து முடிந்தபின்.... "தேவன் ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்." எவ்வாறு காத்திருக்கவேண்டும் என்று கர்த்தாவே, எனக்கு கற்றுத்தாரும், கர்த்தாவே எனக்கு கற்றுத்தாரும். 39. காத்திருக்கிறவர்களே, இளைப்படைய வேண்டாம். நீங்கள் வார்த்தையையும் ஆவியையும் உடையவர்களாயிருந்து, உங்கள் சுய நம்பிக்கைகளை பலியாக செலுத்தி, சிலுவையின் மேல் கிடத்துவீர்களானால், ஏதோவொன்று சம்பவித்தேயாக வேண்டும். அவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள். அந்நேரம், ஒரு சத்தத்தைக் கேட்டாள். அவள் பார்க்கும்படி திரும்பியபோது, வழுக்கை தலையோடு நீண்ட மீசையைக் கொண்ட, கனிவான தோற்றத்துடன் ஒரு வயதான மனுஷன் ஒலிமுகவாசலண்டை நின்று கொண்டிருந்தான். அவன் "எனக்கு குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வருவாயா?" என்றான். ஒரு வேளை அவள் உதடுகளினால், "என்னிடம் சிறிதளவே உள்ளது" என்று சொல்லத் தயாராக இருந்திருப்பாள். தண்ணீர் கிடைப்பது அரிதாக இருந்தது. அனைத்து ஊற்றுகளும் வறண்டு கிடந்தன. அது என்னவாயிருந்தது? தேவன் இரு முனைகளிலும் கிரியை செய்கிறார். தேவன் ஒரு தரிசனத்தைக் காண்பித்து "பட்டணத்திற்குள் போ, இம்முறை உன்னை போஷிக்க காகங்களுக்கு கட்டளையிடவில்லை, ஆனால் உன்னைப் பராமரிக்கும்படி, ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன்" என்றார், மேலும் அவனை ஏழைகளிலும் ஏழையினிடத்திற்கு கொண்டு சென்றார். "உன்னைப் பராமரிக்கும்படி ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன்." அன்றைய தினம் அவளும் அவள் மகனும் உயிர் வாழப் போதியளவு மாகூட அந்த பானையில் அவளிடமில்லா திருந்தது. ஆனாலும், "நான் கட்டளையிட்டிருக்கிறேன். நான் அதை நியமித்திருக்கிறேன்." கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படுவதாக. தேவன் கட்டளையிடுகையில், அது நடந்தாக வேண்டும். அது எதையாவது அங்கே உண்டாயிருக்கும்; தேவன் அதை சந்திப்பார். "உன்னை கவனித்துப்பேணும்படி, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன்" என்றார். 40. அவர் அவனுக்கு ஒரு தரிசனத்தை கொடுத்தார். அவன் தெருவில் நடந்து சென்றுகொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகின்றது. தேவன் அவனிடம் "அங்கு ஒரு வயதான ஸ்திரீ - வயதான தோற்றமளிக்கிற ஒரு ஸ்திரீ இருப்பாள்; அவள் வாலிப ஸ்திரீயே. அவளுடைய தோள்கள் தொங்கியிருக்கின்றன; அவள்... அவளுடைய தோள்பட்டை துணி கந்தலாகி, அவளது சட்டையின் கைபக்கத்தினூடாக வெளியே வந்துவிட்டன. கரங்கள் அவள் இரண்டு விறகுகளைத் தன் கையில் வைத்துக்கொண்டு முற்றத்திலிருப்பாள். மேலும் எலியாவே, அதன் அர்த்தம் என்னவென்று நீ அறிவாயே, இப்போதிலிருந்து சுமார் எண்ணூறு வருஷங்களுக்குப் பின் சம்பவிக்கப் போகின்றதை காட்டுகிறது." மேலும் அவன் நடந்து செல்கையில், அவன் அந்த ஸ்திரீயைக் கண்டான். அவன் அந்த வேலியின்மீது சாய்ந்தவாறு "எனக்குக் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவா" என்றான். அவள் ஏதோவொன்றைச் சொல்ல திரும்பிய போது, "அவர் ஒரு தயையுள்ள வயதான மனுஷனாயிருக்கிறார். அவர் சாதாரண மனுஷரைவிட சற்றே வித்தியாசமாக பேசுகிறாரே" என்று நினைத்தாள். தேவனுடைய பிள்ளைகளிடம் ஏதோவொன்று இருக்கிறதால் அது அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளச் செய்கிறது, எப்பொழுதும் ஏதோ வொன்று இருந்துகொண்டே இருக்கிறது. அவர்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்கின்றனர். இயேசு "என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது" என்றார். பிறகு அவள் பார்த்தபோது, அவள் கேட்டாள். அவள் அவனை நோக்கிப்பார்த்தாள்; அவள் "அந்த வயோதிப மனுஷனிடம் தெய்வீகமான ஏதோவொன்று உள்ளது" என்றாள். "எனக்குக் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவா" என்றான். அவள் தன் தலையை அசைத்து; அதை செய்யும்படி போகத் தொடங்கினாள். என்ன? பின்னர், "நான் புசிப்பதற்கு ஒரு சிறிய அடையாகிய, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா." என்ற அந்த சத்தத்தை மீண்டும் கேட்டாள். அதற்கு அவள், "எனக்கும் பட்டினியாயிருக்கிற என் சிறு பையனுக்கும் கொஞ்சம் மாத்திரமே உள்ளது. இப்பொழுதுதான் அதை பிசைந்து ஆயத்தம் செய்தேன். இந்த இரண்டு விறகை பொறுக்குவதற்காக வந்தேன். இப்பொழுது நானும் அவனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அந்த அடையை ஆயத்தப்படுத்துகிறதற்காக நெருப்பு மூட்டுவதற்கு இந்த இரண்டு விறகுகளை பொறுக்குகிறேன்" என்றாள். 41. அதன் பின் அவள்...அவள் மீண்டும் திரும்பி செல்ல தொடங்கிய போது, "ஆனாலும் முதலில் அதிலே எனக்கு ஒன்றை பண்ணிக் கொண்டுவா" என்று கூறின ஒரு சத்தத்தைக் கேட்டாள். இங்கு நாம் கற்றுக்கொள்வது என்ன? முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை தேடுங்கள் "அதை நான் எப்படி பூர்த்தி செய்வேன்?" என்னால் அதை உங்களுக்கு கூற இயலாது, ஆனால் நீங்கள் தேவனை வையுங்கள். "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் முதலாவது அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். "ஆனாலும் முதலில் அதிலே எனக்கு ஒன்றை கொண்டுவா." கவனியுங்கள், அவள் தன்னிடமுள்ள கடைசி பணத்தை கொண்டுவரும்படி செல்ல வேண்டியதில்லை; அவள் சென்று தன்னிடமுள்ள கடைசி அப்பத்துண்டையே கொண்டுவர வேண்டியதாயிருந்தது. அவள் இதற்காகவோ அல்லது அதற்காகவோ அல்லது ஒருக்கால் வெவ்வேறு மருத்துவர்களை அல்லது அதைப் போன்ற சில முக்கியமற்ற காரியத்தை மாற்றுவதற்காகவோ செய்வதற்காகவோ செல்ல வேண்டியதில்லை; ஆனால் அவளுக்கும் மரணத்திற்கும், அவளுடைய குழந்தைக்கும் இடையில் இருந்த ஒரே ஒரு காரியத்திற்கு அவள் செல்ல வேண்டியிருந்தது. "முதலில் அதிலே ஒரு சிறிய அடையை உன் கையிலே எனக்குக் கொண்டுவா." அவள் கீழ்ப்படிதலுடன், தன் தலையை அசைப்பதை என்னால் பார்க்க முடிகிறது. அதுதான் தேவனுக்குத் தேவையாயுள்ளது. நீங்கள் வார்த்தையையும் ஆவியையும் ஒருசேர கலந்து, தன்னை தானே பலியாக கொடுத்து, கீழ்ப்படிவது. தேவனுடைய தீர்க்கதரிசி ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் சொல்லும்போது, அதைச் செய்யுங்கள்! அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்! அவள் தலைகுனிந்து, "சரி, ஐயா" என்றவாறு அதைச் செய்யத் தொடங்கினாள். அதற்கு பின்பு அவள் இதுவரை கேட்டதிலேயே மிக இனிமையான காரியத்தை கேட்டாள், நாம் யாவரும் கேட்க விரும்புகிற எல்லாவற்றிக்கும் போதுமான அந்த வார்த்தை. அந்த தீர்க்கதரிசியின் சத்தத்திலிருந்து வெடித்து அவ்வொலிமுக வாசலினூடாக கடந்து வந்து, "கர்த்தர் உரைக்கிறதாவது...." என்றது. ஆமென். அதைக் கேட்கவே நாம் எதிர்நோக்கியுள்ளோம். "கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் (THUS SAITH THE LORD)" என்றது. அதுதான் காரியம். ஆமென். 42. ஓ. சில நேரங்களில் மிக நெருக்கடியான சூழல் உருவாகிறது. நாம் அநேக சமயங்களில் அதுதான் துயரமிக்க நிலை என்று நினைக்கிறோம். இருள்சூழ்ந்த நிலை என்னவென்பதை நீங்கள் காண விரும்பினால், தொலைவிலுள்ள களங்களுக்கு எங்களுடன் வந்து பார்க்க வேண்டும். அமெரிக்காவில் நாம் துயரத்தை காண்பதில்லை. நாம் சம்பூரணமாக இருக்கிறோம். துயரமான சூழல் உருவாகிறது. ஆனால் நமது சொந்த வழியில், சொந்த வகையறுத்தலின்படி, அது துயரம் போன்று காணப்படுகிறது என்று நான் அறிவேன். ஜனங்கள் வியாதிப்பட்டு மரித்துக் கொண்டிருப்பதை நாம் துயரம் மிகுந்த நிலையென்று எண்ணுகிறோம்... என்னுடன் கல்கத்தாவின் (Calcutta) தெருக்களில் வந்து நடந்து பாருங்கள். அவர்கள் பெரிய பாடையுடன் அங்கு வந்து, நூற்றுக்கணக்கான மரித்துப்போனவர்களை தூக்கியெடுத்து, தங்களின் தலைமீது வைத்துக் கொண்டு (அவர்கள் யார் என்று கூட அவர்களுக்குத் தெரியாது.), சென்று நெருப்பு கட்டைகளில் (salamander) போட்டு விடுவார்கள். இங்கே ஒரு மனிதன் மரிப்பானானால், குறைந்தபட்சம் அவனுக்கு மதமார்க்கப் பிரகாரமான அடக்க ஆராதனையாவது உண்டு. அவனுக்கு யோவான் பதினான்கு (14) உள்ளது. ஆனால் அந்த ஜனங்களுக்கு ஒரு யோவான் பதினான்கும் (14) இல்லை; இறப்பு அறிவிப்பும் இல்லை. அவர்களை தெருக்களில் இருந்து அகற்றி, வெறுமனே அவர்களைக் குவித்து, தகனம் செய்துவிடுவார்கள். மரித்துக்கொண்டிருக்கும் தாய்மார்கள், அங்கே இருக்கின்ற அவர்களுடைய குழந்தைகள், இவ்விதமாக வயிறுகள் வீங்கி, தாய் மிகவும் பலவீனமாகவும், அவளால் தெருவில் இருந்து எழுந்து நிற்கக்கூட முடியாமல், தன் குழந்தையை காப்பாற்ற பணம் வேண்டிப் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தாள். அப்படியிருக்க நாம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குப்பைத் தொட்டியில் என்ன கொட்டுகிறோம் என்று பாருங்கள். அப்படியிருந்து கொண்டு நாம் கடினமான காலங்களைக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறோம். ஓ, அது கடினமாகத் தோன்றலாம், அது கடினம் தான். ஆனால், நண்பனே... 43. ஒரு சமயம் "தி கிளவுட்ஸ்" (The Clouds - மேகங்கள்) என்று அழைக்கப்படும் ஜெர்மானிய ஓவியம் ஒன்று இருந்தது. அது கலிபோர்னியாவில் உள்ள பாரெஸ்ட் லான் (Forest Lawn) என்ற கல்லறைத் தோட்டத்திலுள்ள ஓவியத்தைப்போன்று பிரபலமான ஓவியமாகும். அது மிகப்பெரியதாகையால், அவ்வோவியத்தை வைக்க ஒரு கட்டிடமே கட்ட வேண்டியிருந்தது, அவர்கள் அரை மில்லியன் அல்லது அதற்கும் மேலாக செலவழித்து ஒரு கட்டிடத்தைக் கட்டி அதை உள்ளே வைத்தனர். அது உலகிலுள்ள மிகப்பெரிய ஓவியங்களில் ஒன்றாகும். ஜெர்மானியர்களிடம் ஒன்று உள்ளது, அது "தி கிளவுட்ஸ்" என்றழைக்கப்படுகிறது. மேலும் நீங்கள் அதனண்டை வருவதற்கு முன்பு தூரே இருந்து அதை நோக்கிப் பார்க்கும்போது, அது பார்வைக்கு மிக பயங்கரமான காட்சியளிக்கும். அது துயரார்ந்த ஒன்றாக காணப்படும். ஓ, அந்த மேகங்கள் ஒன்றுக்கொன்று அடித்துக்கொண்டிருக்கின்றன. ஒரு நபர் பார்க்கக் கூடியதிலேயே மிகவும் திடுக்கிடத்தக்க ஒன்றைப் போன்று அது காணப்படுகிறது. அதை பார்க்கும் நபருக்கு அது மிக மோசமான ஒன்றாக, ஒரு களைப்பு உண்டாக்குகிற சோகமான நாளில், மேகங்கள் உருவாகிறது போல் காணப்படும், ஆனால் நீங்கள் அதன் மிக அருகில் செல்லும் போது, அது தேவதூதர்களின் செட்டைகள் ஒன்றாக அடித்துக்கொண்டு, பரலோகத்தில் களிகூருவதைக் காண்பீர்கள். 44. நாம் சில சமயங்களில் சோதனைகள் வரும்போது நமக்கு அது கடினமானதாக இருப்பதாக நினைக்கிறோம். சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் இந்த ஸ்திரீயையும் இந்தக் குழந்தைகளையும் நினைத்துப் பார்க்கிறேன். இருதயக்கோளாறுடன் அங்கிருக்கின்ற நீங்கள், புற்றுநோயினால் அரிக்கப்பட்டு இன்னும் ஒரு வாரத்துக்குள் மரிக்கும் தருவாயிலுள்ளவர்களே, அது மிக மோசமான இருள்சூழ்ந்த நிலையாக காணப்படக்கூடும், ஆனால் நாம் அவருடைய நோக்கத்தை அறிந்து கொள்ளத்தக்கதாக தொடர்ந்து அருகே தேவனோடு கிட்டிச் சேரும்போது, அது தேவன் அளிக்க விரும்புகின்ற ஜெயத்திற்காக களிகூர ஆயத்தமாக இருக்கின்ற தேவதூதர்கள் என்பதைக் காணலாம். சில நேரங்களில் அது மாறுவேஷத்தில் உள்ளது. ஒருவேளை, "இன்றிரவு நான் மரித்துப் போனால் என்ன செய்வேன்? நான் பூமியில் இருக்கின்ற கடைசி இரவு இதுவாக இருந்தால் என்னவாயிருக்கும்? அதன்பின் என்னவாகும்?" என்று எண்ணுகின்ற பாவிகள் ஒருக்கால் இங்கே அமர்ந்திருக்கலாம். அது இருள்சூழ்ந்தது போல் காணப்படலாம், நீங்கள் மரிக்கப்போவது போன்று காணப்படலாம். ஒருக்கால் நீங்கள் உங்களுடைய வியாதிக்காக ஜெபித்து கொள்வதற்காக இங்கு வந்திருந்தும் நீங்கள் இன்னும் பாவியாக இருக்கக்கூடும். நீங்கள் முதலாவதாக தேவனுடன் சரிசெய்து கொள்ளுங்கள். "நான் ஏன் இதை எடுத்தேன்? எனக்கு வீட்டில் பிள்ளைகள் இருக்கிறார்களே" என்று சொல்லலாம். அது நீங்கள் அந்த பிள்ளைகளுக்கு அசலான தாயாக அல்லது தகப்பனாக இருக்கும்படிக்கு, தேவனிடம் உங்களை கிட்டிச்சேர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கின்ற ஒன்றோடொன்று அடித்துக் கொண்டிருக்கும் தூதர்களின் செட்டைகளாக இருக்கலாம், என்பதை நீங்கள் எங்ஙனம் அறிவீர்கள். புரிகிறதா? 45. அந்த ஸ்திரீக்கு இருந்ததுபோல இக்கட்டான சூழ்நிலையாக அது காணப்படுகிறது. இப்பொழுது நீங்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தை ஆனால் மாத்திரம் எடுத்துக் கொள்ளுவீர்களானால், அது "விருப்பமுள்ளவன் வரக்கடவன், ஜீவத் தண்ணீரூற்றிலிருந்து, ஜீவத்தண்ணீர்களை இலவசமாய் பானம்பண்ணக்கடவன்...' தண்ணீரை இலவசமாய் பானம்பண்ணுங்கள். அது விருப்பமுள்ள வனெவனும் என்பதாயுள்ளது. அது உங்கள் மேல் அந்த பாரமானது சுமத்தப்பட்டிருக்க கூடும். நீங்கள் அந்த தீய செயலைச் செய்திருக்கலாம். இப்போது, கிறிஸ்தவர்களாகிய நீங்கள், சற்று நேரத்திற்கு முன்பு நான் கூறியதன் காரணமாக, உங்கள் இருதயத்தில் குற்றவுணர்வை உணர்ந்திருக்கலாம். ஏனென்றால் ஏதோவொன்று, அக்கிரமமானது உங்கள் இருதயத்தில் வைக்கப்பட்டு உள்ளது. ஒருக்கால் உங்களை தேவனிடம் கிட்டிச் சேர்ப்பதற்கான நோக்கத்திற்காக அது நிகழ்ந்திருக்கலாம். எனக்கும் நிகழ்ந்திருக்கின்றது. நான் அதை கண்டுணர்ந்ததிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது. நான் சரியாக வாழ்ந்து கொண்டிருந்தேன் என்று நினைத்தேன். ஆனால் தேவன் ஒரு சமயம் அவருடைய கரத்தை எடுத்தபோது, சாத்தான் என்னை பிடித்துக்கொண்டான். நாம் சாவுக்கேதுவானவர்கள். அன்றியும் அது ஒரு மறைந்திருக்கின்ற ஆசிர்வாதமாயிருக்கிறது. அவர் நேசிக்கிறாரென்றும் நம்மைத் திரும்ப எடுத்துக்கொள்ள விரும்புகிறார் என்றும் அறிந்திருக்கிறதால் அது என்னை இப்போது இன்னும் அதிகமாக அவருக்கு நன்றி பாராட்டச் செய்கின்றது. இன்றிரவு நீங்கள் அத்தகைய நிலையிலிருந்து, நீங்கள் தேவனை அறியாதிருந்து, உங்கள் இருதயத்தில் குற்றவுணர்வை உடையவர்களாயிருப்பீர்களானால்; வியாதி மற்றும் அதைப்போன்ற பிற காரியங்களால் மிக மோசமான இருள்சூழ்ந்த நிலையாக காணப்படுமானால்; நாம் ஜெபிக்கும்போது ஒரு நிமிடம் இப்போது உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பார்த்து, உங்களை குற்றவாளிகளாகத் தீர்க்கும்படி, அல்லது நீங்கள் சுகமாவதற்குத் தடையாக, அல்லது பரலோகத்திற்கு செல்வதற்கு தடையாக ஏதாவது இருக்கிறதா என்று பாருங்கள். ஏதேனும் இருந்தால், பீடத்திற்கு அருகில் சென்று, தேவதூதர்களின் செட்டைகள் ஒன்றாக அடிக்கவில்லையா என்பதைக் கண்டறியுங்கள். அது ஒரு மோசமான புகைப்படமல்ல, அது தேவன் உங்களை தன்னிடம் கிட்டிச்சேர்க்க முயற்சிக்கிறார். அவர் உங்களை நேசிக்கிறார், அவர் உங்களை விரும்புகிறார். 46. நாம் நம்முடைய தலைகளை தாழ்த்தி, ஜெபிக்கலாம். ஜெபிப்பதற்கு முன்னதாக, நான் கேட்கலாமா அங்கே யாராகிலும்... இன்றிரவு இங்கிருப்பவர்களில் எத்தனை பேர் தங்கள் கரங்களை உயர்த்தி "சகோதரன் பிரன்ஹாம், நானும், தேவனிடம் கிட்டிச் சேரவேண்டுமென விரும்புகிறேன், இன்றிரவு ஜெபத்தில் என்னை நினைவுகூரும்" என்று சொல்ல விரும்புகிறீர்கள். கட்டிடம் முழுவதுமாக, உங்கள் கரங்களை பார்க்கிறேன், 'என்னே. கட்டிடத்தை சுற்றியுள்ள முழுவதும். "நான் தேவனிடம் கிட்டிச்சேர விரும்புகிறேன். எனக்கு தேவன் தேவையாயிருக்கிறார். எனக்கு நீர் வேண்டும், ஓ, நீர் வேண்டும் எனக்கு. ஒவ்வொரு மணி வேளையும் நீர் எனக்கு வேண்டும். இப்போது என்னை உம்மண்டை ஆசீர்வதியும், என் இரட்சகரே; நான் வருகையில்." நீங்கள் செய்ய அறிந்துள்ள யாவற்றையும் நீங்கள் செய்து விட்டீர்களா? நீங்கள் ஒவ்வொரு தேவையையும் உங்களுடைய செய்து பூர்த்திசெய்தும், நீங்கள் பாவங்களுக்காக மனந்திரும்பியும், நீங்கள் ஞானஸ்நானம் பெற்றிருந்தும், மேலும் நீங்கள் செய்ய அறிந்துள்ள அனைத்தையும் செய்தபின்னும், அப்படியிருந்தும் தேவன் பதிலளிக்காதது போல் காணப்படுமானால், இப்போது, நான் உங்களிடம் கேட்கப்போகிறது என்னவெனில் "பற்றிக்கொண்டிருங்கள்." அங்கே தொடர்ந்து பற்றிப் பிடித்திருங்கள்; சிங்காசனத்தில் வீற்றிருக்கின்ற தேவன், உங்களைக் குறித்து எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். உங்கள் இருதயத்தில் குற்றவுணர்வை உடையவர்களாயிருப்பீர்களானால், நீங்கள் செய்யக் கூடாத ஏதோவொன்றை செய்திருப்பதை, ஏதோ சிறு அக்கிரமத்தை, நீங்கள் செய்யக்கூடாத ஒரு சிறு காரியத்தை நீங்கள் செய்திருப்பதை உங்களால் நினைத்துப்பார்க்க கூடுமானால், அதற்காக நீங்கள் மனந்திரும்பும்படி கேட்டுக்கொள்கிறேன். 47. பாவியான நண்பனே, கிறிஸ்துவை உன்னுடைய இரட்சகராக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாமலும், அவரே உனது இரட்சகர் என்று அறியாமலும், இன்றிரவு இங்கு இருப்பாயானால், நீ வரும்படியாக நான் அழைக்கட்டும். நாம் ஜெபத்திற்குப் பிறகு, பாடும்போது, நீ இங்கு பீடத்தண்டை வந்து இங்கே நிற்கும்படி விரும்புகிறேன்; மேலும் நானும் உங்களுடன் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இந்த ஜனங்களின் இருதயங்களை நான் அறியேன். நீர் அவற்றை அறிவீர். ஆனால் கர்த்தர் உரைக்கிறதாவது, பாவத்தையும் அழுக்கையும் நீக்க தேவனுடைய வீட்டில் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டு. அவ்வூற்றில் பாவிகள் மூழ்கி தங்கள் குற்றக்கறைகள் அனைத்தையும் நீக்கக்கூடும். கர்த்தாவே, நாங்கள் நாளை இரவு வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க வருகிறோம். அந்நேரத்திற்காக கூடிவந்திருபோர் பலர் இன்றிரவு இங்கு இருக்கலாம். உம்மண்டை கிட்டிச்சேர நாங்கள் சரியாக இப்பொழுதே தொடங்க விரும்புகின்றோம். நாங்கள் எங்கள் இருதயங்களை, கிடாரியின் சாம்பலைக் கொண்டல்ல, ஆனால் எங்களுடைய பாவங்களை அகற்றுகின்ற இயேசுவின் இரத்தத்தைக் கொண்டு தெளிக்கப்பட விரும்புகிறோம். நாங்கள் மனசாட்சியில் சூடுண்டவர்களாயிருக்க விரும்பாமல், ஜீவிக்கின்ற தேவனிடம் வரவே விரும்புகின்றோம். எங்களுடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் விட்டு மனந்திரும்புகிறோம். இன்றிரவு இங்கே பாவிகள் உள்ளனரென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, பிதாவே, உம்மை அறியாத அவர்கள், ஒருக்கால் நாளை இரவு இங்கே இராமல் போகலாம். அவர்கள் கடந்து போய்விடக்கூடும். கர்த்தாவே, இது ஒரு எச்சரிக்கையின் செய்தியாக இருக்கும்படியாகவும், தேவன் அவர்களை ஒரு நோக்கத்திற்காக இங்கு கொண்டு வந்துள்ளார் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ளவேண்டுமென்றும், அவர் அவர்களை அவரிடம் கொண்டு வர வேண்டுமென்றும் நாங்கள் ஜெபிக்கிறோம். 48. எங்களுக்கு செவிகொடும், கர்த்தாவே, எங்களால் வார்த்தையைப் பேச மாத்திரமே முடியும். இப்போது. ஆவியானவர் எண்ணெயை வார்த்தையுடன் கலப்பீராக. மேலும் பலியானது... இங்கே தவறு செய்த கிறிஸ்தவர்கள் இருக்கக்கூடும், "எழுந்து அந்த பீடத்தண்டை செல்ல வெட்கப்படுகிறேன்"என்று சொல்லலாம். ஆனால் அவர்கள் சிலுவையை நோக்கிப்பார்த்து, அவர் சுமந்த அவமானத்தைக் காண்பார்களாக: அவருடைய ஆடைகள் களையப்பட்டு, நிர்வாணமாக்கி, அவரை அடித்து. ஒரு அவரை வானத்திற்கும் சிலுவையில் தொங்கவிட்டு, பூமிக்கும் நடுவே தூக்கினர். இன்றிரவு அவர்கள் தங்கள் சொந்த பெருமையையும் தங்கள் சொந்த எண்ணங்களையும் பலியிடும்படிக்கு, தங்களையே பலியாக செலுத்துவார்களாக. அவர்களின் அங்கத்தினர்கள் தங்களுடைய தேவனுடன் சரியாக இருப்பதற்காக, முன்னே வந்து, நின்று, அவர்களை மன்னிக்குமாறு தேவனிடம் கேளுங்கள்... எல்லா அக்கிரமங்களையும் அவர்களுடைய இருதயங் களிலிருந்து எடுத்துப்போடும், சகலவித அசுத்தமான சிந்தைகளிலிருந்தும் சுத்திகரித்து, எல்லா பொல்லாப் பானவற்றிலிருந்தும், எல்லா முன்கோபத்திலிருந்தும், புகை பிடிப்பதிலிருந்தும், குடிப்பதிலிருந்தும், அவர்களுக்கு என்னவித பழக்கங்களிருப்பினும்; அவர்களைச் சுத்திகரியும், கர்த்தாவே. நாங்கள் நாளை இரவு ஒரு மகத்தான ஒருங்கிணைந்த ஜனக்கூட்டமாக நின்று, பரிசுத்த ஆவியானவர் இங்கே பொழிந்தருளி, குருடர் பார்க்கவும், செவிடர் கேட்கவும், முடவர் நடக்கவும் செய்வதை காணும்படியாக கசப்பின் வேரை எடுத்துப்போடும். ஒரு பாவி, அவன் தன்னுடைய பாவங்களை விட்டு, அவள் தன்னுடைய பாவங்களை விட்டு மனந்திரும்பி, இன்றிரவு முன்னே வந்து, அதை அறிக்கை செய்வார்களாக, அப்படியானால் நாளை இந்த சிறு நதியண்டையோ, இங்கே எங்காவதோ கொண்டு செல்லப்பட்டு ஞானஸ்நானம் பண்ணப்படலாம். அதை அருளும், பிதாவே. உம்முடைய ஊழியக்காரனின் ஜெபத்தைக் கேட்டருளும். 49. இப்போது, உங்களுடைய இருதயத்தில் அக்கிரமச்சிந்தை கொண்டிருக்கிறவர்கள், நினைவு கூரப்பட விரும்புகின்ற யாவரையும் நான் கேட்கிறேன்... முதலாவதாக, நான் கேட்கப்போகிறேன், நீங்கள் ஜெபிக்கும் போது (ஜெபத்திலிருக்கிற ஒவ்வொரு வரையும்) இதுவரை ஒரு கிறிஸ்தவனாக இல்லாதிருந்து, இப்போது ஒரு கிறிஸ்தவனாகும்படி விரும்புகின்ற யாராகிலும் இங்கே இருக்கிறீர்களா, இப்பொழுது அதை ஒப்புக்கொடுக்க தயாராக உள்ளீர்களா, ஏனெனில் இன்றிரவு சிறிதளவு வார்த்தையை கலந்தவர்களாக இங்கேயிருக்கையில், ஒரு ஆவியானது உங்களிடம் வந்து, "பிள்ளையே, நான் இல்லாமல் நீ மரிப்பாயானால்..." என்று சொல்கிறதா. ஓ, பிசாசு சொல்லுவான், "உன்னால் ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ முடியாது. (புரிகிறதா?) பார், நீ - நீ..." என்பான். நீங்கள் அதைச் செய்தாக வேண்டும் என்கிற அந்த - அந்த சிறிய உணர்வு, இன்றிரவு நீங்கள் எழுந்து நின்று, "சகோதரன் பிரன்ஹாம், எனக்காக ஜெபியும்" என்று கூறுவீர்களா. சற்றே எழுந்து நில்லுங்கள். "நான் ஒரு பாவி என்பதற்கு சாட்சியாக நிற்கின்றேன், மேலும் நான் தேவனிடம் இரக்கத்தை வேண்டுகிறேன்" என்று கூறுங்கள். நாங்கள் காத்திருக்கும் போது, நீங்கள் கட்டிடத்தில் எங்கிருந்தாலும் எழுந்து நிற்பீர்களா? வெட்கப்பட வேண்டாம். ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. உம்மால் கூடுமானால், சற்றே ஒரு கணம் அப்படியே நில்லும். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, ஐயா. வேறு யாராவது இருக்கிறீர்களா? ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அது சரிதான். அது... ஒரு கணம் அப்படியே நில்லுங்கள். அங்கே பின்னால் இருக்கின்ற இளம் பெண்ணே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது இருக்கிறீர்களா? இளம் பெண்ணே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது சரி, கட்டிடம் முழுவதும் உள்ளவர்களே, எழுந்து நில்லுங்கள். "சகோதரன் பிரன்ஹாம், தயவு செய்து என்னை ஜெபத்தில் நினைவுகூரும். நான் ஒரு பாவியாய் இருக்கிறேன். நான் தேவனை அறியேன், ஆனால் ஏதோவொன்று என் இருதயத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறது, இன்றிரவு நான் சற்றே போதுமான வார்த்தையை பெற்றுள்ளேன் அன்றியும் ஒரு சிறிய ஆவி என்னுள் வந்துள்ளது. அது ஒருக்கால் பானையிலுள்ளது காலியாகிவிடும் தருனமாக இருக்கலாம், ஆனால் இப்போது நான் கடந்து வருகின்றேன். நான் தவறாக இருக்கின்றேன் என்றும் தேவனே என் மீது இரக்கமாயிரும் என்றும் சொல்லி அறிக்கையிடும்படி, நான் இங்கே அடியெடுத்து வைக்கிறேன். நான் இந்த அச்சமூட்டக்கூடிய கனவிலிருந்து ஏதோவொரு சமயத்தில் முழுவதும் மகிமையால் நிறைந்த, நித்தியமான ஒரு ஜீவியத்துக்குள் எழுந்திருக்க விரும்புகிறேன்" என்று கூறுங்கள். இந்நேரத்தில் முன்னே வருபவர்கள் வேறு யாராவது இருக்கிறீர்களா, நீங்கள் எழுந்து... உங்களுடைய இருக்கையிலிருந்து எழுந்து, "இப்பொழுது ஒரு பாவியாக இருக்கும் நான், ஒரு சாட்சியாக நிற்க விரும்புகிறேன்" என்று சொல்லுங்கள். 50. இப்போது ஜெபத்தில் நினைவுகூருவதற்காக இவர்கள் நிற்கின்ற போது, சற்றே தங்களை குற்றவாளிகளாக தீர்க்கின்ற, ஒரு சிறு கசப்புணர்வை உணருகின்ற கிறிஸ்தவர்களிடம் கேட்கிறேன்; அக்கிரமத்துடன் இருக்கிற கிறிஸ்தவர்களே, நான் உங்களை அழைக்கிறேன்... வெட்கப்படாதீர்கள், தேவன் அதை அறிவார். உங்கள் இருதயத்திடம் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். நீங்கள் எழுந்து நின்று, "தேவனே, நான் வெட்கப்படவில்லை. நான் அதை செய்ததை குறித்து வெட்கப்படுகிறேன்." (ஒலி நாடாவில் காலியிடம். - ஆசி.]...?... "என்னை நீர் மன்னிக்குமாறு உம்மிடம் வேண்டுவதற்காக, நான் எழுந்து நிற்க போகிறேன். நான் சொஸ்தமாக விரும்புகின்றேன். நான் இந்த கூட்டத்தில் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். உம்மிடமிருந்து - சில ஆசீர்வாதங்களை பெற விரும்புகின்றேன், மேலும் நான் தவறாக இருக்கின்றேன் என்று என் இருதயம் என்னை குற்றவாளியாகத் தீர்ப்பதை உணர்கிறேன். நான் தவறானதை செய்தேன். நான் ஏதோவொன்றை எடுத்திருக்கிறேன். நான் ஏதோவொன்றை கூறியிருக்கின்றேன். என்னிடம் - என்னிடம் அக்கிரமம் உள்ளது; கர்த்தாவே, நான் எழுந்து நிற்கப் போகிறேன்" என்று சொல்லுவீர்களா. இப்பொழுது எழுந்து நில்லுங்கள். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது சரி. கட்டிடம் முழுவதுமாக. அது சரியே. எழுந்து நின்று, "அது தவறு என்று நான் அறிக்கை செய்ய விரும்புகிற ஒன்று என்னிடம் இருக்கிறது" என்று சொல்லுங்கள். நீங்கள் அதை எங்களிடம் அறிக்கை செய்ய வேண்டியதில்லை; நீங்கள் அதை தேவனிடம் அறிக்கை செய்யுங்கள். எழுந்து நில்லுங்கள். தேவனுடைய ஆசீர்வாதங்களிலிருந்து உங்களை மறைக்கின்ற ஏதேனும் ஒன்று உங்கள் இருதயத்தில் இருப்பதாக உணருகின்ற மற்றவர்கள்... ஏதோவொன்று... அந்த சிறிய காரியம் இந்த முழு ஆராதனை கூட்டத்தையும் நிறுத்தக்கூடும். அது ஒருவேளை இந்த பெண் சக்கர நாற்காலியிலிருந்து குணமடைவதைத் தடுக்கலாம். இங்கே முடமான நிலையில் அமர்ந்திருக்கும் இந்த சிறுவன் நடக்க அது உதவக்கூடும். 51. இப்போது, நீங்கள் நின்று கொண்டிருக்கும்போது, நீங்கள் செய்வீர்களா என்று நான் வியக்கிறேன்... நீங்கள் உத்தமமானவர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் அவ்வாறுதான் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். மேலும் நான் உங்களுக்காக தனிப்பட்ட முறையில் ஜெபிக்க விரும்புகிறேன். இதை நான் அதிகமாக செய்ய முடிவதில்லை, ஏனென்றால் இது எல்லாம் சுகமளிக்கும் ஆராதனையில் உள்ளது. நீங்கள் இங்கே நடந்து வந்து இந்த பீடத்தின் ஒரு பக்கத்தில் இங்கே வர விரும்புகிறேன், மற்றும் சற்றே ஒரு நிமிஷம் இங்கே நில்லுங்கள், நான் உங்களுடன் ஜெபம் செய்வேன், வருவீர்களா? இப்பொழுதே வெளியே வாருங்கள். சற்றே நகருங்கள். அவ்வளவுதான். எழுந்து நிற்கின்ற நீங்கள் ஒவ்வொருவரும், எல்லோரும், முன்னே வாருங்கள். ஏதேனும் தவறான ஒன்றைச் செய்திருக்கின்ற, உங்கள் இதயத்தில் அக்கிரம உணர்வு இருக்கின்ற, அல்லது அறிக்கை செய்யப்படாத பாவத்தையுடைய எவரும், கடந்து வாருங்கள். இங்கே ஒரு முடமான பையன் தனது நாற்காலியை நகர்த்திக்கொண்டு இங்கே வருகின்றான். தேவனே, நான் என் முழு ஆத்துமாவோடும், இருதயத்தோடும், சரீரத்தோடும், அந்த மனிதன் தன்னுடைய நிலைமையிலிருந்து சுகமடைய வேண்டும் என்று ஜெபிக்கிறேன். வெளியே கடந்து வாருங்கள். அவ்வளவுதான். நாம், மீதமுள்ள நாம் இப்போது... அவர்கள் வருகின்றபோது பாடுவோம். எந்நேரமும் நீரே வேண்டும், மா இரக்கமுள்ள கர்த்தாவே; சமாதானம் தர உம் உருக்கமான சத்தம்போல் வேறில்லையே. (நீங்கள் இப்போது எழுந்திருக்க மாட்டீர்களா, முன்பு எழுந்து நிற்காத நீங்களும், வாருங்கள்.) ...நீரே வேண்டும், எனக்கு நீரே வேண்டும், எவ்வேளையும் நீரே வேண்டும்! என் இரட்சகா, என்னையிப்போ ஆசீர்வதியும், உம்மண்டை நான் வருகையில். இப்பொழுது, அதை நாம் மௌனமாக பாடுகையில் நம் தலைகளை தாழ்த்துவோம். (சகோதரன் பிரன்ஹாம் மௌனமாக பாடுகின்றார் - ஆசி.) 52. மனஸ்தாபப்படுகின்ற நண்பனே, நீ கொண்டிருக்கின்ற எல்லாவற்றோடும் கூட இப்பொழுது இங்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீ அதை சிலுவையண்டை கொண்டு வந்துள்ளாய். நான்... அவருடைய ஊழியக்காரனாக, உன்னிடம் கூறப் போகிறேன், கர்த்தர் உரைக்கிறதாவது, தன் பாவங்களை அறிக்கை செய்கிறவன் இரக்கம் பெறுவான்; தன் பாவங்களை மறைக்கிறவன், மூடுகிறவன் வாழ்வடைய மாட்டான். இரக்கத்தை வேண்டுகிறவன் இரக்கம் பெறுவான். உங்களிடம் ஏதோவொன்று பேசினதால், நீங்கள் வருகிறீர்கள். அது பரிசுத்த ஆவியானவராகும். இப்பொழுது, அவரிடம் நீங்கள் வேண்டிக்கொள்ள விரும்புகிறேன்... நீங்கள் ஏற்கனவே மன்னிக்கப்பட்டுவிட்டீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன், நிச்சயமாக. பாவிகளே, உங்கள் பாவங்கள் போய்விட்டன. ஏனெனில் நீ எழுந்து நின்றபோதே, நீ ஒரு சாட்சியை அளித்தாய்; நீ இயேசுவுக்காக நின்றாய். அவர் உனக்காக நிற்பார். "மனுஷர் முன்பாக நீங்கள் என்னை சாட்சி பகர்ந்தால், நானும் பிதாவின் முன்பாகவும் பரிசுத்த தூதர்களின் முன்பாகவும் உங்களை உங்களை சாட்சி பகருவேன்." அந்த வார்த்தைகள் தோல்வியடைய முடியாது. அவை தேவனுடைய வார்த்தைகளாகும். இயேசுவானவர் இப்போது பிதாவின் முன்பாக உங்களுக்காக நின்று கொண்டிருக்கிறார்.. உங்கள் பாவம் இரத்தத்தின் கீழ் உள்ளது. 53. இப்போது, நாம் ஒன்றாக ஜெபிக்கும் வேளையில், ஜெப களத்தில் இருக்கும் அனைத்து கிறிஸ்தவர்களும் இப்போது எங்களுடன் சேர்ந்து ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஸ்தோத்திரிக்கப்பட்ட கர்த்தாவே, தாங்கள் தவறாக இருப்பதை உணர்ந்த ஒரு கூட்ட ஜனங்கள் இன்றிரவு இங்கு நின்று கொண்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் இன்றிரவுவரை உம்மை தங்களுடைய இரட்சகராக ஒருபோதும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. ஆனால் அவர்கள் - அவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் உம்மை ஏற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். நீர் அவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள். இப்பொழுது, உம்முடைய வார்த்தையின்படியே, "என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்" என்று நீர் கூறினீர். அப்படியானால் தேவன் இந்த ஆத்துமாக்களை இன்றிரவு கிறிஸ்துவுக்கு அன்பின் வெகுமதிகளாக வழங்கியுள்ளார். "ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை, ஏனெனில் என் பிதா எல்லாரிலும் பெரியவரா யிருக்கிறார்." இப்பொழுது இவர்கள் உம்முடையவர்கள். "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக் குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட் பட்டிருக்கிறான்." கர்த்தாவே, நீர் அவர்களுடன் பேசியபோது அவர்கள் உம்முடையவர்களாயிருந்தனர்; உலகத்தோற்றத்துக்கு முன்னே அவர்கள் உம்முடையவர்களாக இருந்தனர். அன்றியும் இன்றிரவு, சுவிசேஷத்தின் வலை அவர்களை உம்மண்டை இழுத்துள்ளது. அவர்கள் உம்முடையவர்கள். கர்த்தாவே, அவர்களை விசாரியும். அவர்களை உம்முடைய கைகளில் ஒப்புக்கொடுக்கிறோம்; கர்த்தாவே, உருக்கமாய் இரக்கம் காண்பியும். 54. தங்கள் இருதயத்தில் அக்கிரம உணர்வைக் கொண்டுள்ள, சொல்லியிருக்கின்ற அல்லது செய்திருக்கின்ற உம்முடைய அல்லது தவறான ஒன்றை பிள்ளைகள் சிலர் இங்கே இருக்கின்றனர். கர்த்தாவே, நான் தவறான ஒன்றைச் செய்திருந்தேன், சென்று அதை சரி செய்ய வேண்டியிருந்தது என்ற என்னுடைய சாட்சியை இன்றிரவு கேட்டதனால், ஒருக்கால் அவர்களும் வந்துள்ளனர். அந்த சிறிய சுழல்காற்றினூடாக கடந்து சென்ற அந்த தேவன், இன்றிரவு இங்கிருக்கும் ஒவ்வொரு இருதயத்தின் மீதும் கடந்து செல்லட்டும், அக்கிரமத்தை அவர்களிலிருந்து வெளியேற்றும், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் அவர்களை கழுவும், அவர்களுடைய விசுவாசத்தையும் ஆவியையும் பரிசுத்த ஆவியினுடைய மகத்தான ஐக்கியதிற்குள்ளாக புதுப்பியும். அதை அருளும், கர்த்தாவே. அவர்கள் உம்முடையவர்கள். அவர்கள் மனஸ்தாபத்துடன் நிற்கிறார்கள், அவர்கள் தவறாக இருந்துள்ளனர் என்றும், அதை சரிசெய்துகொள்ள விரும்புகிறதாகவும், இந்த அவை ஜனங்கள் முன்பாக முழு அறிக்கை செய்கின்றனர். நீர், "என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை" என்றுரைத்தீர். கர்த்தாவே, நீர் இங்கே இருக்கிறீர் என்றும், அதைச் செய்வீர் என்பதையும் நாங்கள் அறிந்திருக்கின்றோம். இப்போது, நாம் காத்திருக்கையில், அவர்கள் தலைகளை வணங்கி இருக்கும்போது, இங்கே இதுவரை பரிசுத்த ஆவியைப் பெறாமலும், மேலும் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு ஜெபத்தில் நினைவுகூரப்பட விரும்புகின்றவர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள் என்று வியக்கிறேன், உங்கள் கையை உயர்த்துங்கள்? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வலதுபுறத்தில் ஒரு பீடம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இங்கே ஒரு பீடம் ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இங்கே நிற்கும் இவர்களிடம் நான் கேட்கிறேன். சக்கர நாற்காலியுடன் உள்ள சிறுவனுடன் அங்கே இருக்கிற உங்களில் சிலர், இங்கே என் வலதுபுறமாக உள்ள இந்த பீடத்தண்டை செல்லுங்கள். இன்னும் சில நிமிடங்களில் நாங்கள் உங்களை அங்கு சந்திக்கப் போகிறோம். சரியாக அந்த வழியில் செல்லுங்கள். 55. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிராத உங்களிடம் நான் கேட்கப்போகிறேன், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற விரும்புவீர்களானால், அதை தொடங்க இதுவே நேரம். நீங்கள் இங்கு கூடார ஸ்தலத்தில் (campgrounds) இருக்கின்றீர்கள்; நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளுகின்ற ஒரு நேரத்தில் இருக்கின்றீர்கள், பரிசுத்த ஆவியைப் பெறாத யாதொருவரும் எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்ல மாட்டார்கள் என்று நீங்கள் அறிவீர்கள். உறங்கிக் கொண்டிருக்கும் கன்னிகை இருப்பாள், அவள் செல்வதில்லை... மரணமடைந்த மற்றவர்கள் ஆயிரம் வருஷமளவும் உயிரடையவில்லை. அதே தான். சரியாக இந்த வழியில் செல்லுங்கள், என் நண்பர்களே. அவ்வளவுதான், அப்பா. நீங்கள் அனைவரும், இங்கே சேர்ந்து வாருங்கள். எடுங்கள்... இளைஞனே, நாற்காலியிலுள்ள அந்த பையனை சரியாக இங்கே நகர்த்துவாயா. சரியாக இந்த வழியினூடாக, நீங்கள் அனைவரும், இப்போது சரியாக இதனூடாக இங்கே வருவீர்களா. உங்களுக்கு தேவன் செய்தவற்றிற்காக கொஞ்சம் நன்றி சொல்லும்படியாக இங்கே சந்திக்க வாருங்கள்... சரியாக இந்த வழியாக வாருங்கள். 56. இப்போது, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற விரும்பும் நீங்களும், வருவீர்களா? இங்கே வாருங்கள். நீங்கள் எழுந்து நின்று, "நான் - அலுவலில் இருக்கின்றேன், சகோதரன் பிரன்ஹாம். நான் அதாவது தேவனுடன் அலுவலில் இருக்கின்றேன். இன்றிரவு என் இருதயத்தில் ஒரு சிறிய வார்த்தையை பெற்றுள்ளேன், மேலும் ஒரு சிறு ஆவியானது என்னிடம் கூறுகின்றது, இன்றிரவு நான் தேவனுடைய இந்த வாக்குத்தத்தத்தை என்னுடன் பேசுகின்ற அந்த ஆவியுடன் கலந்தால் நான் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறுகின்றது, நான் அதை பெற்றுக்கொள்ள வருகின்றேன்" என்று சொல்லுங்கள். இன்றிரவு தேவன் அதை உங்களுக்குச் செய்வார் என்று சொல்ல போதுமான ஆவி உங்களில் இருக்கிறதா? அது இருக்குமானால், உங்கள் கரத்தை உயர்த்துங்கள், போதுமான தைரியத்தை உங்களுக்குள் கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால், இன்றிரவு நீங்கள் அந்த அபிஷேகத்தைப் பெற முடியும் என்று உங்களிடம் கூறிக்கொண்டிருக்கிற போதுமான பரிசுத்த ஆவியின் உறுதிப்பாடும், ஆவியும் அங்கே இருக்கிறதா? அது இருக்குமானால், இங்கே வாருங்கள் சற்றே ஜெபம் செய்வோம், பின்பு நாங்கள் உங்கள் மீது கரங்களை வைத்து ஜெபிக்கும்படியாக இங்கே செல்லுங்கள். நீங்கள் வர விரும்பவில்லையா? நீங்கள் உண்மையாகவே அதை விரும்பினால், இப்பொழுது வாருங்கள். அது சரிதான். "நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்" என வேதாகமம் அவ்வாறு கூறுகிறது. தேவன் தம்முடைய வார்த்தைகளைத் தவறவிட முடியாது. நீங்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் ஆயத்தமாகி கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் எவ்வளவு காலம் பரிசுத்த ஆவியைத் தேடினீர்கள்? நீண்ட காலமாக. நீண்ட காலமாக பரிசுத்த ஆவியை தேடியுள்ளீர்கள். இப்போது, இன்றிரவு அவர் இங்கிருக்கின்றார். என்னாயிற்று ? ஒருவேளை நீங்கள் மனச்சோர்வடைந்து கைவிட்டுவிட ஆயத்தமாக இருந்திருக்கலாம். ஆனால் என்ன சம்பவித்தது? 57. உடன் ஒத்துழைக்கின்ற ஊழியக்காரர்களில் சிலர், இங்கிருக்கும் இந்த ஜனங்களிடம் சென்று எப்படி ஜெபிக்க வேண்டும் என்றும், எப்படி தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்றும் கற்றுத்தர வேண்டும் என்று விரும்புகிறேன். தேவனை அறிந்த இங்குள்ள ஊழியக் காரர்களில் சிலர், தேவனை அறிந்த இங்கிருக்கின்ற சகோதரர்களாகிய உங்களில் யாராகிலும், அங்கு வாருங்கள்; உங்களில் நான்கு அல்லது ஐந்து பேர், அங்கே செல்லுங்கள் மேலும் உங்களில் சிலர் இங்கு இவர்களுடன் நில்லுங்கள். நாம் அவர்களுக்காக ஜெபிக்க போகிறோம். இங்கே இக்கட்டிடத்தினுள் உங்களில் எத்தனை பேர் சுவிசேஷ சுவிசேஷ ஊழியக்காரராக இருக்கின்றீர்கள், சுவிசேஷ ஊழியக்காரர்கள், கரங்களை உயர்த்துங்கள். உங்கள் ஸ்தாபனத்தைப் பற்றி நாங்கள் கேள்வி கேட்கவில்லை, நீங்கள் இங்கே இருக்க விரும்புகிறோம். ஊழியக்காரர்களாகிய நீங்கள் அனைவரும் இங்கே வாருங்கள். இங்கே நீங்கள் இருக்க விரும்புகிறோம். அதற்கான நேரம் இதுவே. எலியாக்களாகிய நீங்கள் யாவரும், இங்கே வாருங்கள். எண்ணெயையும் மாவையும் ஒன்றாகசேர்த்து கலந்த ஜனங்கள் அவர்கள் இங்குள்ளனர். பெற்றுக்கொள்வதற்காகவே இங்கு வந்துள்ளனர். அதைப் பெறுவதற்காகவே அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். நாம் வந்து கர்த்தர் உரைக்கிறதாவது நம்மிடம் உள்ளது என்பதைக் காண்பிப்போம். 58. இன்று பரிசுத்த ஆவி உங்களுக்காக இருக்கின்றது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு என்ன கூறினான்? "சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று அவர்கள் கேட்டபோது, அவன், "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது" என்றான். அது சரியா? அப்படியானால் நீங்கள் இங்கேயிருக்கிறீர்கள். அவர்கள் வேதாகம காலங்களில் என்ன செய்தனர்? அவர்கள் மீது கரங்களை வைத்தனர். இப்போது, நாம் இந்த ஜனங்களுக்காக ஜெபிக்கப்போகின்றோம். ஊழியக்காரர்களாகிய நீங்கள் எல்லோரும், நின்றவண்ணமாக ஜெபியுங்கள். பிறகு அவர்களை நாம் பீடத்தண்டை கொண்டு செல்லலாம், அங்கே, அவர்கள் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள போகிறார்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இந்த ஆராதனை ஆறு இரவுகள் உண்டாயிருக்கும். பரிசுத்த ஆவியானவர் உங்களை அபிஷேகிக்கும்வரை நீங்கள் உங்கள் முழங்கால் களிலிருந்து வர வேண்டாம், அப்பொழுது இங்கே ஒரு எழுப்புதல் ஆரம்பிக்கும். வேண்டாம்....அலுவலில் உண்மையான கருத்துள்ளவர் களாயிருப்போம். நாம் இப்போது செயல் பணிக்காக வந்துள்ளோம். நாம் இதைச் செய்ய போகின்றோம். தேவன் அதை வாக்களித்திருக்கிறார், பிசாசு அதிலிருந்து நம்மை திருடிக்கொள்ள போவதில்லை. அது சம்பவிக்கும் வரையிலும் நாம் இங்கேயே தரித்திருக்கப்போகிறோம். அது சரிதான். 59. இப்பொழுது, நாம் தலைகளை வணங்குவோம். கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அனைவரும், அருகாமையில் உள்ள ஊழியக்காரர்களாகிய நீங்களும், இப்போது இங்கு பரிசுத்த ஆவியை நாடுகின்ற இவர்களுக்காக ஜெபியுங்கள். பிதாவே, இங்குள்ள இவர்கள் ஏற்கனவே அறிக்கை செய்த கிறிஸ்தவர்களாயிருக்கின்றனர். ஆனால், தீவட்டிகளில் எண்ணெய் வைத்திருந்தவர்கள் மட்டுமே கலியாண விருந்துக்குள் பிரவேசித்தனர் என்பதை அவர்கள் வேதத்தில் வாசிக்கின்றனர். மேலும் அவர்கள் இன்றிரவு எண்ணெயைப் பெற்றுக் கொள்ளும்படியாக வருகின்றனர். அவர்கள் சில நிமிடங்களுக்கு முன்பு பார்த்த விதமாக, பானையில் ஏற்கனவே மாவு உண்டாயிருந்ததினால், ஆவியானது அங்கே அதனுள் கலந்தது. அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினுடைய கொழுந்து விட்டு எரியும் அக்கினியை உணரும்படியாகவும், அது கிறிஸ்துவின் சிலுவையை அவர்களின் இருதயங்களில் ஒளிரச்செய்து, அவர்களை வல்லமையினாலும் மகிமையினாலும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினாலும் நிரப்பத்தக்கதாக, தங்களையே பலியாக அளிக்க வருகின்றனர். அதை அருளும், கர்த்தாவே. 60. அபிஷேகம்பண்ணப்பட்ட தேவனுடைய ஊழியக்காரர்கள் அவர்களுடன் நிற்கின்றார்கள். கர்த்தாவே, விசுவாசத்தின் ஜெபத்தை ஜெபிப்பதற்காக, நாங்கள் இங்கு வந்துள்ளோம். ஒவ்வொரு சபையையும் ஒரு கொழுந்து விட்டெரிகிற அக்கினியாக மாற்றும் படியாக, இங்குள்ள பொது சமுதாயத்திலும் சுற்று வட்டாரத்திலும் நாங்கள் ஒரு மகத்தான எழுப்புதலைக் காண விரும்புகிறோம். மேலும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் இன்றிரவு உம்மிடம் வந்திருக்கின்றோம். நீர் எங்களைத் தள்ள மாட்டீர் என்று விசுவாசிக்கிறோம். இந்தச் சிறுவன், சிறு பெண் முதல் வயோதிபர் வரை ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வார்களாக. கடந்த நாட்களில் கிறிஸ்து சொன்னது போல், அவருடைய ஊழியக்காரர்களாகிய நாங்களும் இப்போது, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று சொல்கிறோம். கர்த்தாவே, ஜீவ ஆவியை அவர்கள்மேல் ஊதுவீராக. அவர்கள் இப்போது சென்று பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வார்களாக. 61. இப்போது வலதுபுறமாகச் செல்லுங்கள். பரிசுத்த ஆவியை நாடுகின்ற நீங்கள் ஒவ்வொருவரும், இந்த வழியாகச் செல்லுங்கள். ஊழியக்காரர்கள் உங்களுடன் அங்கு சென்று பரிசுத்த ஆவியானவர் வரும் வரை அங்கேயே தரித்திருப்பார்கள். நான் மீதமுள்ள சபையாருடன் சற்றே ஒரு நிமிடம் இடைபட விரும்புகிறேன். வியாதியஸ்தர்களுக்காக எந்த ஜெபமும் இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் காரியங்களைச் சரியாக துவங்குவோமானால், நாம் சரியானதையே செய்வோம். ஏதாவது தவறாக சென்றிருக்குமானால், அதை சரி செய்யவே விரும்புகிறோம். ஆமென். 62. சரியாக இந்த வழியாக, அங்கே செல்லுங்கள். ஊழியக்காரர்கள், உபதேசிகளாகிய நீங்களும், இப்போது அவர்களுடன் செல்லுங்கள், அது-வேண்டாம்... இப்போதிருந்து சனிக்கிழமை இரவுவரை அதற்கு ஆனாலும் சரி, நீங்கள் உங்கள் முழங்கால்களில் இருந்து உங்கள் இருதயத்தில் எழப் போவதில்லை என்று உங்கள் தீர்மானம் செய்து கொள்ளுங்கள். "நான் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்?" நீங்கள் தரிப்பிக்கப்படும் வரைக்கும். "இன்னும் எதுவரை?" நீங்கள் அதை பெறும் வரைக்கும். இக்கட்டிடத்தில் பணிசெய்கின்ற எத்தனை விருப்ப பெண்கள் அல்லது ஆர்வ ஊழியர்கள் உள்ளனர்... ஆண்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள், இந்த ஜனங்களுடன் செல்ல விரும்புகின்றீர்களா. உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரி ரோசெல்லா. சரி, அவர்களுடன் செல்லுவாயா? பரிசுத்த ஆவியானவர் ஏதோ ஒருவரை நிரப்பும் போது அவர்களுடன் நிற்க விரும்புகின்ற ஒரு அருமையான விருப்ப ஆர்வ ஊழியர் வேறு யாராவது இங்கு இருக்கிறீர்களா? ஸ்திரீகளாகிய உங்களில் யாரேனும் அல்லது புருஷர்களாகிய உங்களில் யாராகிலும், நீங்கள் அதை செய்ய விரும்புகிறீர்களா? ஸ்திரீகளாகிய நீங்கள் ஸ்திரீகளிடம் செல்லுங்கள், புருஷர்களே நீங்கள் புருஷர்களின் அருகே செல்லுங்கள். அங்கே நில்லுங்கள். உத்தமமாக இருங்கள். பிசாசை துரத்தி அவனை தோற்கடியுங்கள். அவன் தோற்கடிக்கப்பட்ட ஒருவனாயிருக்கிறான். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவன் ஒரு பெரும் ஏமாற்றுக்காரனாயிருக்கிறான். அவனுக்கு நம்மீது எந்தவித சட்டப்பூர்வமான உரிமையும் கிடையாது. நாம் தேவனுடைய ஆவியினால் பிறந்த சுயாதீனப் பிள்ளைகள். தேவனின் சுதந்தரமாகிய இதில் நமக்கு உரிமை உண்டு, மேலும் நாம் அதை விசுவாசிக்கிறோம். 63. இன்னமும் முன்னே வராதிருக்கின்ற பாவியாயுள்ள யாராவது இங்கிருக்கின்றீர்களா, உங்கள் கரங்களை உயர்த்தி "சகோதரன் பிரன்ஹாம், என்னை நினைவுகூரும். செல்வதற்கான துணிவுகூட என்னிடம் இல்லை. ஆனால் நான் அடுத்த முறை வருவேன் என்கிறதான உறுதியை தேவன் எனக்குத் தரும்படியாக ஜெபித்துக்கொள்ளும். நாளை இரவு நான் இங்கிருந்து, மீண்டும் கடந்து செல்வதற்காக, தேவன் என் ஜீவனை, விபத்துகளோ எதுவுமோ இல்லாமல் இன்றிரவு காத்துக்கொள்ள ஜெபியும்" என்று சொல்லுங்கள். உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். யாரேனும் தங்களுடைய இருதயத்தில் அக்கிரமத்தை உடையவர்களாயிருந்தும், வராமல் இருந்தால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அதைக்குறித்து உண்மை உள்ளவர்களாக இருங்கள். கரங்களை உயர்த்தி "சகோதரன் பிரன்ஹாமே, எனக்காக ஜெபியும்" என்று கூறுங்கள். எத்தனை பேர் வியாதியுடனும் உபத்திரவத்துடனும் இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்தி "நான் வருகிறேன், எனக்காக ஜெபிக்குமாறு விரும்புகிறேன். நான் சரியாக இருக்க விரும்புகின்றேன்" என்று சொல்லுங்கள். சரி, உங்கள் தப்பிதங்களை எல்லாம் இப்போது அறிக்கை செய்யுங்கள். உங்களுக்கு இப்போதிலிருந்து நாளை மதிய - நாளை இரவு இந்நேரம் வரை உள்ளது. தேவன் இந்த தேசத்தில் இதுவரை செய்ததை விட இங்கு அதிகமான சுகமளித்தலை செய்யப்போகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அதை விசுவாசிக்கின்றேன். ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி, நாம் இப்போது பாடுகையில் எழுந்து நிற்போம். ஒவ்வொரு மணிவேளையும் நீர் எனக்கு வேண்டும், மிக... அன்புள்ள தேவனே, இயேசுவின் நாமத்தினாலே, இந்த கைக்குட்டைகளுக்காக நான் ஜெபிக்கின்றேன், கர்த்தாவே, நீர் அவர்களுக்கு மகத்தான வல்லமையை அளித்து, இவை யாருக்குச் சொந்தமானதோ அவர்களை குணமாக்கும். நான் இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன். ஆமென். சரி, சகோதரன் சல்லிவன் (Sullivan), இங்கே வாரும். இப்பொழுது உம் ஜனங்களை அனுப்பிவிட விரும்புகிறீரா? ... ஓ, நீர் எனக்கு வேண்டும், ...?...கர்த்தர் உங்களை இப்போது ஆசீர்வதிப்பாராக...